Entire family lost their lives due to an iPhone: இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலம், சத்ரபதி சம்பாஜிநகரில் ஐபோனுக்கான மாதாந்திர தவணை பணம் தொடர்பாக ஏற்பட்ட குடும்பத் தகராறு சோகத்தில் முடிந்துள்ளது.

ஒரு குடும்பமே பலி

பெற்றோருடன் வசித்து வந்த 18 வயதான குணால், வாங்கிய ஐபோனுக்கான தவணையைச் செலுத்த குடும்பத்தினரிடம் பணம் கேட்டுள்ளார்.

ஒரு ஐபோனால் ஒரு குடும்பமே பலியான அதிர்ச்சி சம்பவம்! | Maharashtra Teen And Parents Dies For Iphone Issue

இதுதொடர்பாக வீட்டில் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து, அவர் அருகிலுள்ள மலை உச்சிக்குச் சென்று உயிரை மாய்த்துக்கொள்ள போவதாக கூறியுள்ளார்.

சுமார் மூன்று மணி நேரமாக அவரது பெற்றோர் மற்றும் கிராம மக்கள் அவரை கீழே இறங்குமாறு சமாதானப்படுத்த முயன்றுள்ளனர்.

ஒரு ஐபோனால் ஒரு குடும்பமே பலியான அதிர்ச்சி சம்பவம்! | Maharashtra Teen And Parents Dies For Iphone Issue

 

பின்னர், குணாலின் தந்தை முரளிதர் அவரைக் கையைப் பிடித்து கீழே அழைத்துவர முயன்றபோது, இருவரும் மலை உச்சியின் மறுபுறம் இருந்த பள்ளத்தில் விழுந்துள்ளார்.

கணவரும் மகனும் பள்ளத்தில் விழுந்ததைக் கண்ட சங்கீதாவும் பள்ளத்தில் குதித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இதில் மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்த காணொளிகள் இணையத்தில் வைரலாகி பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.