ரியாலிட்டி ஷோக்களுக்கு பெயர் பெற்ற விஜய் தொலைக்காட்சியில் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்ற நிகழ்ச்சியாக பிக்பாஸ் திகழ்கிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் 10வது சீசன் கடந்த செப்டம்பர் 6ஆம் தேதி 19 போட்டியாளர்களுடன் பிரம்மாண்டமாக தொடங்கியது.

நிகழ்ச்சி ஆரம்பித்த முதலே போட்டியாளர்களுக்கு இடையிலான போட்டி, கருத்து வேறுபாடுகள் மற்றும் சுவாரஸ்யமான சம்பவங்கள் என பிக்பாஸ் வீடு பரபரப்பாகவே காணப்படுகிறது. இந்நிலையில், நிகழ்ச்சியில் அண்மையில் ஆனந்த் வைல்ட் கார்டு என்ட்ரியாக களமிறங்கியுள்ளார்.

பிக்பாஸ் 10 பரபரப்பாகும் நிலையில்… கம்ருதீன் -பாரு வீடியோவுக்கு குவியும் லைக்குகள்! | Bb Kamurudin Celebrates His Birthday With Vj Paru

ஏற்கெனவே விறுவிறுப்பாக நகர்ந்து கொண்டிருந்த நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு போட்டியாளரின் வருகை மேலும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

பிக்பாஸ் 10வது சீசனில் இந்த முறை யார் வெற்றியாளராக உருவெடுக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

பிக்பாஸ் 10 பரபரப்பாகும் நிலையில்… கம்ருதீன் -பாரு வீடியோவுக்கு குவியும் லைக்குகள்! | Bb Kamurudin Celebrates His Birthday With Vj Paru

 

வைரலாகும் கம்ருதீன் பிறந்தநாள் கொண்டாட்டம் 

இதற்கிடையில், கடந்த 9வது சீசனில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த போட்டியாளர்களில் ஒருவரான கம்ருதீனின் பிற்நத நாள் கொண்டாட்ட காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. 

பிக்பாஸ் 10 பரபரப்பாகும் நிலையில்… கம்ருதீன் -பாரு வீடியோவுக்கு குவியும் லைக்குகள்! | Bb Kamurudin Celebrates His Birthday With Vj Paru

கடந்த சீசனில் சர்ச்சைக்குரிய வகையில் நடந்து கொண்டதாகக் கூறப்பட்ட நிலையில், கம்ருதீனுக்கு ரெட் கார்டு வழங்கப்பட்டு பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். இந்நிலையில், கம்ருதீன் தனது பிறந்தநாளை பார்வதி மற்றும் அவரது குடும்பத்தினருடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.

இந்த பிறந்தநாள் கொண்டாட்டம் தொடர்பான காணொளியே தற்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. குறித்த காணொளியைப் பார்த்த ரசிகர்கள் கம்ருதீனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.