ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றி மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். இதில் கிரகங்களின் தலைவனாகக் கருதப்படும் சூரியன் மாதந்தோறும் ராசியை மாற்றுவார்.

அந்தவகையில், செப்டம்பர் 17ஆம் தேதி சூரியன் சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்குள் நுழைந்தார். அப்போது கன்னி ராசியில் ஏற்கனவே கிரகங்களின் இளவரசனாகவும், புத்திசாலித்தனம், பேச்சு, கல்வி, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாகவும் கருதப்படும் புதன் பயணித்து வந்தார்.

கன்னி ராசியில் உருவான புதாதித்ய ராஜயோகம்: 6 ராசிகளுக்கு சிறப்பான பலன்கள்! | Budhaditya Rajyog From Today Who Get Huge Growth

கன்னி ராசியின் அதிபதியும் புதனே என்பதால், சூரியன் மற்றும் புதனின் சேர்க்கையால் அங்கு புதாதித்ய ராஜயோகம் உருவாகியுள்ளது. இந்த ராஜயோகம் செப்டம்பர் 26ஆம் தேதி வரை நீடிக்கும். அதன் பின்னர் புதன் துலாம் ராசிக்குள் நுழைவார்.

இந்த புதாதித்ய ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், 6 ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறவுள்ளதாக ஜோதிடம் கூறுகிறது.

குறிப்பாக, தங்களின் திறமையின் அடிப்படையில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளையும் இவர்கள் பெறுவார்கள். சூரியன் மற்றும் புதனின் சேர்க்கையால் உருவாகும் இந்த புதாதித்ய ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் 6 ராசிக்காரர்கள் யார் யார் என இந்த  பதிவில் விரிவாக பார்க்கலாம்.

ரிஷபம்

கன்னி ராசியில் உருவான புதாதித்ய ராஜயோகம்: 6 ராசிகளுக்கு சிறப்பான பலன்கள்! | Budhaditya Rajyog From Today Who Get Huge Growth

ரிஷப ராசியின் 5-வது வீட்டில் புதன் மற்றும் சூரியனின் சேர்க்கையால் புதாதித்ய ராஜயோகம் உருவாகியுள்ளது. இதனால் இந்த ராசியைச் சேர்ந்த மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள்.

தேர்வுகளில் சிறப்பாக செயல்பட்டு நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள். புதிய திறன்களைக் கற்றுக்கொள்வதில் ஆர்வம் அதிகரிக்கும். எழுத்து, ஊடகம், மார்கெட்டிங் துறையில் இருப்பவர்களுக்கு முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.

ஏற்கனவே செய்த முதலீடுகளிலிருந்து நல்ல லாபம் கிடைக்கலாம். வியாபாரிகளுக்கு புதிய ஒப்பந்தங்கள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.

சிம்மம்

கன்னி ராசியில் உருவான புதாதித்ய ராஜயோகம்: 6 ராசிகளுக்கு சிறப்பான பலன்கள்! | Budhaditya Rajyog From Today Who Get Huge Growth

சிம்ம ராசியின் 2-வது வீட்டில் புதன் மற்றும் சூரியனின் சேர்க்கையால் புதாதித்ய ராஜயோகம் உருவாகியுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு நிதி ரீதியாக சிறப்பான காலமாக இருக்கும்.

பணியிடத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்க வாய்ப்புள்ளது. திறமையான பேச்சின் மூலம் பல வேலைகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள். வணிகர்களுக்கு இக்காலம் லாபம் தரக்கூடியதாக அமையும்.இருப்பினும், பேசும்போது சற்று நிதானத்தைக் கடைப்பிடிப்பது அவசியம்.

கன்னி

கன்னி ராசியில் உருவான புதாதித்ய ராஜயோகம்: 6 ராசிகளுக்கு சிறப்பான பலன்கள்! | Budhaditya Rajyog From Today Who Get Huge Growth

கன்னி ராசியின் முதல் வீட்டில் புதன் மற்றும் சூரியனின் சேர்க்கையால் புதாதித்ய ராஜயோகம் உருவாகியுள்ளது. இதனால் தொழில் வாழ்க்கை, முடிவெடுக்கும் திறன் மற்றும் ஆளுமை போன்றவை மேம்படும்.

பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. ஊடகம், எழுத்து மற்றும் ஐடி துறையைச் சேர்ந்தவர்கள் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள்.ஆனால் எதற்கும் அளவுக்கு அதிகமாக சிந்திப்பதைத் தவிர்க்க வேண்டும்.

விருச்சிகம்

கன்னி ராசியில் உருவான புதாதித்ய ராஜயோகம்: 6 ராசிகளுக்கு சிறப்பான பலன்கள்! | Budhaditya Rajyog From Today Who Get Huge Growth

விருச்சிக ராசியின் 11-வது வீட்டில் புதன் மற்றும் சூரியனின் சேர்க்கையால் புதாதித்ய ராஜயோகம் உருவாகியுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு நல்ல நிதி ஆதாயம் மற்றும் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது.

தொழிலதிபர்களுக்கு நல்ல லாபம் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். ஏற்கனவே செய்த முதலீடுகளிலிருந்தும் நல்ல லாபம் கிடைக்கலாம்.நிதி முயற்சிகளில் வெற்றி கிடைத்து, தொழில் வாழ்க்கையும் சிறப்பாக அமையும்.

தனுசு

கன்னி ராசியில் உருவான புதாதித்ய ராஜயோகம்: 6 ராசிகளுக்கு சிறப்பான பலன்கள்! | Budhaditya Rajyog From Today Who Get Huge Growth

தனுசு ராசியின் 10-வது வீட்டில் புதன் மற்றும் சூரியனின் சேர்க்கையால் புதாதித்ய ராஜயோகம் உருவாகியுள்ளது. இதனால் தொழில் ரீதியாக சிறப்பான பலன்கள் கிடைக்கும்.

வேலையை மாற்றும் எண்ணம் இருந்தால், இக்காலத்தில் அதற்கான வாய்ப்புகள் கிடைக்கலாம். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்ற சாதக நன்மைகள் அமையும்.

வணிகர்கள் மற்றும் வியாபாரிகளுக்கு எதிர்பாராத அளவில் லாபம் கிடைக்கலாம். முக்கியமாக, இந்த யோகத்தால் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்.

மகரம்

கன்னி ராசியில் உருவான புதாதித்ய ராஜயோகம்: 6 ராசிகளுக்கு சிறப்பான பலன்கள்! | Budhaditya Rajyog From Today Who Get Huge Growth

மகர ராசியின் 9-வது வீட்டில் புதன் மற்றும் சூரியனின் சேர்க்கையால் புதாதித்ய ராஜயோகம் உருவாகியுள்ளது. இதனால் மாணவர்கள் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெற்று வெற்றியடைவார்கள்.

அரசு வேலைக்காக முயற்சித்துக் கொண்டிருப்பவர்களுக்கு இக்காலத்தில் நல்ல செய்திகள் கிடைக்கலாம். வெளிநாடு செல்லும் ஆசை உள்ளவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் கிடைக்கலாம்.சிலருக்கு வெளியூர் அல்லது வெளிமாநிலங்களில் நல்ல சம்பளத்துடன் வேலை வாய்ப்புகளும் தேடிவரும்.