பொதுவாகவே எல்லா காவங்களிலும் மலிவு விலையில் கிடைக்கக்கூடிய ஆரோக்கியமான உணவுகளின் பட்டியலில் நிச்சயம் முட்டை இடம்பிடித்துவிடும். 

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் எல்வோரும் விரும்பி உண்ணும் முட்டை புதர சத்தின் முகச்சிறந்த மூலமாக திகழ்கின்றது. முட்டையை கொண்டு பல்வேறு வகையில் சமையல் செய்ய முடியும். 

நாவூரும் சுவையில் முட்டை பொடிமாஸ்... இப்படி ஒரு முறை செய்து பாருங்க | Egg Podimas Masala Recipe In Tamil

அந்த வகையில் சற்று வித்தியாசமாக முறையில் அனைவரும் விரும்பி உண்ணும் வகையில் முட்டை பொடிமாஸ் அசத்தல் சுவையில் எளிமையாக எப்படி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம். 

தேவையான பொருட்கள்

சோம்பு - ½ தே.கரண்டு 

கிராம்பு - 2

பெரிய வெங்காயம் - 3

தக்காளி - 3 

பூண்டு - 12 அல்லது 15 பல் 

இஞ்சி - சிறியது (2 இன்ச் அளவு துண்டு)

பச்சை மிளகாய் - 2 

மஞ்சள் தூள் - ¼ தே.கரண்டு

மிளகாய் தூள் - 1 தே.கரண்டு

மல்லித்தூள் - 1தே.கரண்டு

சீரகத்தூள் - ¼ தே.கரண்டு

மிளகு தூள் - ½ தே.கரண்டு

கரம்  மசாலா - ½ தே.கரண்டு

கருவேப்பிலை - ஒரு கொத்து 

எண்ணெய் - தேவையான அளவு 

உப்பு - தேவையான அளவு

நாவூரும் சுவையில் முட்டை பொடிமாஸ்... இப்படி ஒரு முறை செய்து பாருங்க | Egg Podimas Masala Recipe In Tamil

பொடிமாஸ் செய்ய தேவையானவை

முட்டை - 7

மிளகு தூள் - ½ டீ ஸ்பூன்

மஞ்சள் தூள் - 2 சிட்டிகை

உப்பு -தேவையான அளவு

நாவூரும் சுவையில் முட்டை பொடிமாஸ்... இப்படி ஒரு முறை செய்து பாருங்க | Egg Podimas Masala Recipe In Tamil

செய்முறை

முதலில் வெங்காயம் மற்றும் பூண்டை தோல் உரித்து சுத்தம் செய்து பொடிப்பொடியாக நறுக்கி தனியாக வைத்துக்கொள்ள வேண்டும். 

அதனையடுத்து இஞ்சியை தோல் சீவி துண்டுகளாக நறுக்கி ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து, அதனுடன் பூண்டையும் சேர்த்து விழுதாக அரைத்து கொள்ள வேண்டும்

பின்னர் நன்றாக பழுத்த சிவப்பு தக்காளியை கழுவி காம்பு பகுதியை நீக்கி விட்டு ஒன்றிரண்டாக நறுக்கி, அதை மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்து வைத்து கொள்ள வேண்டும். பச்சை மிளகாயை இரண்டாக கீறி வைத்துக்கொள்ள வேண்டும். 

நாவூரும் சுவையில் முட்டை பொடிமாஸ்... இப்படி ஒரு முறை செய்து பாருங்க | Egg Podimas Masala Recipe In Tamil

அதன் பின்னர் ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து சேர்த்து கொள்ள வேண்டும். அதனுடன் மிளகு தூள், சிறிதளவு மஞ்சள் தூள், மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து அடித்து கொள்ளவும்.

பின்னர் பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்த்து, சூடானதும்  அடித்து வைத்த முட்டை சேர்த்து சிறிது நேரம் விட்டு திருப்பி போட வேண்டும். 

உடனே கரண்டியால் அதை பொடிமாஸ் போல் பொடியாக கரண்டியால் உடைத்து வேக விட்டு தனியே எடுத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர்  வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் சேர்த்து காய விட்டு, அதனுடன் கிராம்பு மற்றும் சோம்பு சேர்த்து பொரிய விடவேண்டும்.

நாவூரும் சுவையில் முட்டை பொடிமாஸ்... இப்படி ஒரு முறை செய்து பாருங்க | Egg Podimas Masala Recipe In Tamil

பின்பு நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கி, அதில் கருவேப்பிலை, நறுக்கிய பச்சை மிளகாய், மற்றும் அரைத்து வைத்த இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போகும் வரையில் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும். 

அதனுடன் அரைத்து வைத்த தக்காளியை சேர்த்து நன்றாக வேக விட்டு தொக்கு பதத்திற்கு வரும் வரையில் வேக விட்டு, அதனுடன்  மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், மிளகுத்தூள், கரம்  மசாலா, சீரகதூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து பச்சை வாசம் போகும் வரையில் வதங்க்கிக்கொள்ள வேண்டும்.

இறுதியில் முட்டை பொடிமாஸை சேர்த்து கிளறி இறக்கினால் அவ்வளவு தான் சப்பாத்தி மற்றும் தோசைக்கு சுவையான முட்டை பொடிமாஸ் மசாலா தயார்.