நடிகை மற்றும் பிரபல தொகுப்பாளினியாக வலம் வரும் ஷாலின் வெறும் 100 நாட்களில் 16 கிலோ உடல் எடையை குறைத்து தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் அசுர வேகத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.

ஷாலின் ஜோயா.

மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தனது இயல்பான நடிப்பால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகை ஷாலின் ஜோயா.

16 கிலோ எடை குறைத்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய ஷாலின் ஜோயா! வைரலாகும் புகைப்படங்கள் | Shaalin Zoya 16 Kg Weight Loss New Photos Viral

குழந்தை நட்சத்திரமாக தொடங்கிய இவரது திரைப்பயணம், நாளுக்கு நாள் அடுத்தடுத்த வாய்ப்புகளுடன் வளர்ந்து வந்தது.மலையாள சினிமாவைத் தொடர்ந்து தமிழ் சினிமாவிலும் ஷாலின் ஜோயா தனது தடத்தை பதித்துள்ளார்.

‘ராஜா மந்திரி’, ‘கண்ணகி’ உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து தமிழ் ரசிகர்களிடையேயும் பரிச்சயமான முகமாக மாறினார்.

16 கிலோ எடை குறைத்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய ஷாலின் ஜோயா! வைரலாகும் புகைப்படங்கள் | Shaalin Zoya 16 Kg Weight Loss New Photos Viral

வெள்ளித்திரையில் மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் தனது திறமையை வெளிப்படுத்தி, தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார்.

குறிப்பாக விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபல சமையல் நிகழ்ச்சியான ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அதேபோல், தொகுப்பாளினியாகவும் தனது திறமையை வெளிப்படுத்திய ஷாலின் ஜோயா, ஜீ தமிழில் நடிகை சுஜிதாவுடன் இணைந்து சமையல் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கியிருந்தார்.

16 கிலோ எடை குறைத்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய ஷாலின் ஜோயா! வைரலாகும் புகைப்படங்கள் | Shaalin Zoya 16 Kg Weight Loss New Photos Viral

இப்படி சின்னத்திரை, வெள்ளித்திரை என பிஸியாக வலம் வந்த ஷாலின் ஜோயா, கடந்த சில காலமாக எந்த நிகழ்ச்சியிலும், புதிய படங்களிலும் அதிகம் காணப்படவில்லை. இதனால் ரசிகர்கள் பலரும், “ஜோயா தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்?” என்று ஆர்வமாக இருந்து வந்தனர்.

ஆனால் சினிமா மற்றும் சின்னத்திரையில் இருந்து சற்று விலகியிருந்தாலும், சமூக வலைத்தளங்களில் மட்டும் அவர் தொடர்ந்து ஆக்டிவாக இருந்து வருகிறார்.குறிப்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுடன் தொடர்பில் இருந்து வருகிறார்.

16 கிலோ எடை குறைத்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய ஷாலின் ஜோயா! வைரலாகும் புகைப்படங்கள் | Shaalin Zoya 16 Kg Weight Loss New Photos Viral

வைரலாகும் புகைப்படங்கள்

இந்நிலையில், ஷாலின் ஜோயா சமீபத்தில் வெளியிட்ட ஒரு புகைப்படம் தான் தற்போது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.

அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும், “இது நம்ம ஜோயாவா?” என்று ஆச்சரியப்படும் அளவுக்கு அவரது தோற்றத்தில் மிகப்பெரிய மாற்றம் தெரிகிறது.

16 கிலோ எடை குறைத்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய ஷாலின் ஜோயா! வைரலாகும் புகைப்படங்கள் | Shaalin Zoya 16 Kg Weight Loss New Photos Viral

அதாவது, ஷாலின் ஜோயா தனது உடல் எடையில் சுமார் 16 கிலோ வரை குறைத்து, முன்பை விட முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் காட்சியளித்துள்ளார்.

அவரது இந்த புதிய லுக்கை பார்த்த ரசிகர்கள் பலரும் ஆச்சரியத்துடன் தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். தற்போது ஷாலின் ஜோயாவின் அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் அவருக்கு லைக்ஸையும், வாழ்த்துகளையும் குவித்து வருகின்றனர்.