ரஷிய அதிபர் புதினின் செய்தித் தொடர்பாளரான டிமிட்ரி பெஸ்கோவ், கொரோனா அறிகுறியுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரஷிய அதிபர் புதினின் செய்தி தொடர்பாளர் கொரோனா அறிகுறியுடன் ஆஸ்பத்திரியில் அனுமதி உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 42,86,765 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றுக்கு இதுவரை 2,88,209 பேர் உயிரிழந்துள்ளனர். உலகை அச்சுருத்தி வரும் கொரோனா வைரஸ் ரஷிய நாட்டில் ஆரம்ப காலகட்டத்தில் கட்டுப்பாட்டிற்குள் இருந்த நிலையில், தற்போது நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் இந்நிலையில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினின் செய்தித் தொடர்பாளரான டிமிட்ரி பெஸ்கோவ், கொரோனா அறிகுறியுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே ரஷிய பிரதமர் மிகைல் மிசுஸ்டினுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இதனிடையே கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 10,899 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ரஷியாவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 2,32,243 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுக்கு இதுவரை அங்கு 2,116 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் அங்கு கொரோனா தொற்றில் இருந்து 43,512 பேர் முழுமையாக சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் இங்கிலாந்து, இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளை பின்னுக்குத்தள்ளி ரஷியா மூன்றாவது இடத்தில் உள்ளது. உலக அளவில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் ஸ்பெயினும் உள்ளன.
ரஷிய அதிபர் புதினின் செய்தி தொடர்பாளர் கொரோனா அறிகுறியுடன் ஆஸ்பத்திரியில் அனுமதி
- Master Admin
- 12 May 2020
- (561)
தொடர்புடைய செய்திகள்
- 11 March 2024
- (925)
மறந்தும் கூட வாங்கி சாப்பிடக்கூடாத 6 மீன...
- 23 April 2024
- (296)
தீராத தோஷம் நீங்க காகத்திற்கு எப்படியான...
- 22 March 2021
- (684)
வெளிநாட்டில் உயிருக்கு போராடிக் கொண்டிரு...
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
