பொதுவாகவே நமது வாழ்வில் அனைத்து விடயங்களிலும் எண்கள் தொடர்புப்படுவதாகவும், எண்களால் ஒருவரை வாழ வைக்கவும் முடியும்.அது போல் வீழ்த்தவும் முடியும் என எண் கணித சாஸ்திரம் குறிப்பிடுகின்றது.

இது ஒருவர் பெயருக்கும், பிறந்த திகதி, மாதம், வருடம், பெயர் அனைத்தின் கூட்டுத்தொகையாக வரும் எண்ணுக்கும் அவர்களின் எதிர்கால வாழ்விற்கும் இடையில் உள்ள தொடர்பை கணித்து கூறும் ஒரு பழங்கால சாஸ்திர முறையாக அறியப்படுகின்றது.

பிறப்பு எண் படி வெற்றியைத் தாமதப்படுத்தும் உங்க பழக்கம் எதுன்னு தெரியுமா? | Discover Your Weaknesses Through Numerology

அந்தவகையில், ஒருவருடைய பிறந்த எண்ணின் பிரகாரம், அவர்களின் எந்த பழக்கம் வாழ்வில் முன்னேறுவதற்கு பெரும் தடையாக இருக்கும் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

பிறந்த எண்ணின்படி உங்களிடம் இருக்கும் பலவீனங்கள் என்ன?  

எண் 1: 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு ஈகோ அதிகமாக இருக்கும். மற்றவர்கள் சொல்வதைக் கேட்காமல் ஆதிக்கம் செலுத்துவதால், உயர் அதிகாரிகளுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். இது வாழ்வில் முன்னேற பெரும் தடையாக இருக்கும்.

எண் 2: 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் அதிக உணர்ச்சிவசப்படுவார்கள். தன்னம்பிக்கை குறைவாலும், மனநிலையில் அடிக்கடி மாற்றங்கள் ஏற்படும். இதனால் சரியாக முடிவெடுக்க முடியாத நிலை ஏற்படும். 

பிறப்பு எண் படி வெற்றியைத் தாமதப்படுத்தும் உங்க பழக்கம் எதுன்னு தெரியுமா? | Discover Your Weaknesses Through Numerology

எண் 3: 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் அதிக தன்னம்பிக்கை கொண்டிருப்பார்கள். தங்களை மற்றவர்களைவிட உயர்ந்தவர்களாக நினைப்பதால், வாழ்க்கையில் சிரமங்களைச் சந்திக்க நேரும்.

எண் 4: 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் குறுக்கு வழிகளில் செயல்பட விரும்புவார்கள். கோபமும் இவர்களின் தொழில் முன்னேற்றத்திற்குத் தடையாக அமையும்.

எண் 5: 5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் ஒரே வேலையில் தொடர்ந்து கவனம் செலுத்துவதில் சிரமப்படுவார்கள். விரைவில் சலிப்படைவதால் அடிக்கடி வேலையை மாற்ற வேண்டிய நிலை உருவாகும்.இதனால் வாழ்க்கையில் நிலைத்தன்மை குறையலாம்.

பிறப்பு எண் படி வெற்றியைத் தாமதப்படுத்தும் உங்க பழக்கம் எதுன்னு தெரியுமா? | Discover Your Weaknesses Through Numerology

எண் 6: 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களை எளிதில் நம்புவார்கள். ஏமாற்றங்களைப் பொறுத்துக்கொள்வதுடன், மற்றவர்களின் பொறுப்புகளையும் தாங்களே ஏற்றுக்கொள்வார்கள்.

எண் 7: 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் தங்கள் உணர்வுகளை மற்றவர்களிடம் வெளிப்படுத்துவதில் சிரமப்படுவார்கள். இதனால் தனிமையாக உணரக்கூடும்.

எண் 8: 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் கடினமாக உழைத்தாலும், வெற்றியும் பதவி உயர்வும் தாமதமாகக் கிடைக்கலாம். இதனால் விரக்தியடைய வாய்ப்புள்ளது.

எண் 9: 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் கோபத்தைக் கட்டுப்படுத்துவதில் சிரமப்படுவார்கள். அவசரமாகச் செயல்படுவதுடன், கோபத்தில் பொருட்களைத் தூக்கி எறியவும் செய்வார்கள். இதனால் வாழ்க்கையில் நிலைத்தன்மை பாதிக்கப்படலாம்.