ஜோதிடத்தில் கிரகங்களின் இளவரசனாகக் கருதப்படுபவர் புதன். இவர் புத்திசாலித்தனம், பேச்சு, கல்வி, வியாபாரம் ஆகியவற்றின் காரகராக விளங்குகிறார்.

சந்திரனுக்கு அடுத்தபடியாக மிகக் குறுகிய காலத்தில் தனது நிலையை மாற்றும் கிரகமாகவும் புதன் கருதப்படுகிறார். தற்போது துலாம் ராசியில் பயணிக்கும் புதன், அக்டோபர் 30ஆம் தேதி அங்கேயே அஸ்தமனமாகிறார்.

துலாம் ராசியின் அதிபதி சுக்கிரன் ஆவார். புதன் அஸ்தமனமாவதால் அனைத்து ராசிகளிலும் ஏதாவது ஒரு வகையில் தாக்கம் ஏற்படும் என ஜோதிடத்தில் கூறப்படுகிறது.

குறிப்பாக, சில ராசிக்காரர்கள் பணப் பிரச்சனைகளையும் தொழிலில் சிக்கல்களையும் சந்திக்க நேரிடலாம். எனவே, செலவுகளைக் கட்டுப்படுத்தி எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என ஜோதிட நிபுணர்களால் கணிக்கப்பட்டுள்ளது. 

அப்படி புதன் அஸ்தமனத்தால் எந்தெந்த ராசிக்காரர்கள் நிதி மற்றும், தொழில் விடயத்தில் அதிக சவால்களை சந்திக்கப்போகின்றார்கள் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

 

மேஷம்

புதன் அஸ்தமனம்: பணப் பிரச்சனையை சந்திக்கப்போகும் டாப் 3 ராசிகள்! | Mercury Combust In Libra Who Get Bad Luck

மேஷ ராசியின் 7-ஆவது வீட்டில் புதன் அஸ்தமிக்கவுள்ளார். இதன் காரணமாக, மேஷ ராசியைச் சேர்ந்தவர்கள் வியாபாரம் தொடர்பான விஷயங்களில் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும். இல்லையேல் நட்டம் ஏற்பட வாய்ப்புள்ளது.

குறிப்பாக, புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும்போது அவசரப்படாமல், அனைத்து விவரங்களையும் நன்கு ஆராய்ந்து முடிவெடுப்பது அவசியம்.

வியாபாரம் செய்து வருபவர்களுக்கு தங்களது கூட்டாளிகளுடன் கருத்து வேறுபாடுகள் அல்லது பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஏற்கனவே தீர்க்கப்பட்டதாக நினைத்த பழைய பிரச்சனைகள்கூட மீண்டும் தலைதூக்கலாம்.

இதனால் மன அமைதியும் மகிழ்ச்சியும் பாதிக்கப்படக்கூடும். எனவே, இந்தக் காலகட்டத்தில் மற்றவர்களின் பேச்சைக் கேட்டு அவசரமாக எந்தவொரு முக்கிய முடிவையும் எடுக்க வேண்டாம். நன்கு சிந்தித்து முடிவெடுப்பது நல்லது.

கடகம்

புதன் அஸ்தமனம்: பணப் பிரச்சனையை சந்திக்கப்போகும் டாப் 3 ராசிகள்! | Mercury Combust In Libra Who Get Bad Luck

கடக ராசியின் 4-ஆவது வீட்டில் புதன் அஸ்தமிக்கவுள்ளார். இதன் காரணமாக, கடக ராசிக்காரர்கள் குடும்ப உறுப்பினர்களுடன் கருத்து வேறுபாடுகளைச் சந்திக்க நேரிடலாம்.

குறிப்பாக, பணம் தொடர்பான விஷயங்களில் பொறுமையுடன் செயல்படுவதுடன், தேவையற்ற வாக்குவாதங்களையும் தவிர்ப்பது நல்லது.

புதிய வீடு அல்லது சொத்து வாங்கத் திட்டமிட்டிருந்தாலோ, புதிய வாகனம் வாங்க நினைத்தாலோ, இந்தக் காலகட்டத்தில் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும்.

வாங்குவது தொடர்பான அனைத்து விவரங்களையும் நன்கு ஆராய்ந்த பிறகே முடிவெடுக்க வேண்டும். அதேபோல், வேலைக்கும் குடும்பத்திற்கும் இடையே சரியான சமநிலையைப் பராமரிப்பது அவசியம். 

கன்னி

புதன் அஸ்தமனம்: பணப் பிரச்சனையை சந்திக்கப்போகும் டாப் 3 ராசிகள்! | Mercury Combust In Libra Who Get Bad Luck

கன்னி ராசியின் 2-ஆவது வீட்டில் புதன் அஸ்தமிக்கவுள்ளார். இதனால், கன்னி ராசிக்காரர்கள் பணம் தொடர்பான விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

ஏற்கனவே கடந்த காலங்களில் எடுத்த நிதி முடிவுகளை மீண்டும் ஒருமுறை சிந்தித்துப் பார்ப்பதற்கான சூழல் உருவாகலாம். பிறரிடம் கொடுத்த பணத்தைத் திரும்பப் பெறுவதற்காக, சம்பந்தப்பட்ட நபர்களை நேரில் சந்தித்துப் பேச வேண்டி ஏற்படும். 

எனவே, வரவு செலவு விஷயங்களில் திட்டமிட்டு செயல்படுவது நல்லது. குறிப்பாக, இந்தக் காலகட்டத்தில் மற்றவர்களுக்கு அதிக தொகையைக் கடனாகக் கொடுப்பதைத் தவிர்ப்பது அவசியம். கடன் கொடுப்பதையும் தவிர்ப்பது சிறப்பு