பொதுவாகவே பெண்கள் தலையில் பூ வைக்கும் வழக்கம் என்பது பல நூற்றாண்டுகளாக தமிழ் கலாச்சாரத்தில் ஒரு முக்கிய அங்கமாக இருந்து வருகிறது.

குறிப்பாக, பெண்கள் தங்கள் கூந்தலில் பூக்களை வைப்பது அழகு மற்றும் பெண்மைக்கான அடையாளமாகக் கருதப்படுகிறது. மேலும் இது  மங்கலகரமானது. ஆன்மீகத்துடன் தொடர்புடையது, எதிர்பாலினத்தவரை ஈர்க்கும் என்பது போன்ற கருத்துக்கள் பரவாக சொல்லபடுவவை தான். 

பெண்கள் ஏன் தலையில் பூ வைக்கிறாங்கன்னு தெரியுமா? இப்படியொரு ரகசியம் இருக்கா! | Why Girls Wear Flowers On Their Heads Benefits

பெண் கைப்பைகள்

ஆனால் பெண்கள் தலையில் பூ வைத்துக்கொள்வதற்கு பின்னால் உள்ள அறிவியல் காரணங்கள் மற்றும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா? அது குறித்த விரிவாக விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.

பெண்கள் ஏன் தலையில் பூ வைக்கிறாங்கன்னு தெரியுமா? இப்படியொரு ரகசியம் இருக்கா! | Why Girls Wear Flowers On Their Heads Benefits

பெண்கள் தினமும் தலையில் பூ வைத்துக்கொள்வதன் காரணமாக அவர்களுடைய மன அழுத்தம் குறையும் என்று அறிவியல் ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

பெண்கள் தலையில் பூ சூடும்போது அதன் வாசனை மனதை அமைதிப்படுத்துவதுடன் புத்துணர்ச்சியாகவும் மகிழ்சியாகவும் மனநிலையை மாற்றுகின்றது.

இதனால் ஸ்டிரஸ் ஹார்மோன் என்று சொல்லப்படுகிற மன அழுத்திற்கு காரணமான ஹார்மோன் உற்பத்தி குறைந்து மன அழுத்தம் உண்டதாவதை தடுக்கின்றது. தலையில் பூ வைத்திருக்கும் பெண்களின் அருகில் இருக்கும் கணவனுக்கும் மன அமைதி கிடைக்கின்றது. 

பெண்கள் ஏன் தலையில் பூ வைக்கிறாங்கன்னு தெரியுமா? இப்படியொரு ரகசியம் இருக்கா! | Why Girls Wear Flowers On Their Heads Benefits

தற்காலகட்டத்தில் பெரும்பாலான பெண்களுக்கு ஹார்மோன் சமநிலையால் ஏற்படும் உடல் நலப் பிரச்சினைகள் அதிகரித்துவருகின்றது.

தைராய்டு முதல்  பிசிஓஎஸ், மெனோபஸ் முன்அறிகுறி, ஹாட் ஃபிளஷ் வரைக்கும் பல பிரச்சினைகளைச் சந்திக்கிறார்கள். ஆனால் இந்த அளவுக்கு ஹார்மோன் சமநிலையின்மையும் அதனால் ஏற்படும் பிரச்சினைகள் நமது அம்மா காலத்தில் குறைவு பாட்டிகள் காலத்தில் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். 

அதற்கு முக்கியக் காரணம் உணவுமுறை, வாழ்க்கை முறை என்றாலும் தலையில் பூ வைத்துக்கொள்ளும் வழக்கம் பின்பற்றப்பட்டமையும் அதற்கு ஒரு முக்கிய காரணமாக குறிப்பிடப்படுகின்றது.

தினமும் தலையில் பூ வைத்துக் கொண்டு குழந்தைக்கு பாலூட்டும் போது பால் சுரப்பை அதிகரிக்கும் என்றும் சொல்லப்படுகின்றது. ஆனால் அதற்கு அறிவியல் ஆதாரங்கள் இல்லை.

பெண்கள் ஏன் தலையில் பூ வைக்கிறாங்கன்னு தெரியுமா? இப்படியொரு ரகசியம் இருக்கா! | Why Girls Wear Flowers On Their Heads Benefits

உடல் சூட்டைத் தணிக்க வாரத்திற்கு ஒருமுறை எண்ணெய் தேய்த்து குளிப்பது, தினமும் தலைக்கு எண்ணெய் தேய்ப்பது ஆகியவற்றைச் நமது முன்னோர்கள் பின்பற்றினார்கள். 

அத்துடன் பெண்கள்  தலையில் தினமும் பூ வைப்பதன் மூலமும் உடல் சூடு தணிகிறது. குறிப்பாக வெயில் காலத்தில் தான் மல்லிகை பூ அதிகம் பூக்கும். அந்த காலத்தில் அந்த மலரை தலையில் வைத்துக்கொள்ளும் போது உடல் சூட்டால் ஏற்படும் ஆரோக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். 

பெண்கள் ஏன் தலையில் பூ வைக்கிறாங்கன்னு தெரியுமா? இப்படியொரு ரகசியம் இருக்கா! | Why Girls Wear Flowers On Their Heads Benefits

தற்காலத்தில் அறிவியல் வளர்ச்சி காரணமதக மனதையும் உடலையும் ரிலாக்ஸாக வைக்க நிறைய தெரபி சிகிச்சைகள் வந்துவிட்டன. ஆனால், முன்னைய காலங்களில் பெண்கள் தலையில் பூ வைப்பதன் மூலம் அதில் உள்ள அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் நல்ல தெரபியூடிக் பண்பாக செயல்படுகிறது. 

அதன் காரணமான தான் மல்லிகை பூ பெண்கள் வைத்திருந்தால் அவர்களுக்கு மட்டுமல்ல அருகில் இருப்பவர்களுக்கும் ஒருவித மயக்க நிலை ஏற்படுகிறது.இது ஒரு நல்ல மசாஜ்க்கு நிகரான ரிலாக்ஸ்ஸை கொடுக்கின்றது.

பெண்கள் ஏன் தலையில் பூ வைக்கிறாங்கன்னு தெரியுமா? இப்படியொரு ரகசியம் இருக்கா! | Why Girls Wear Flowers On Their Heads Benefits

தற்கால பெண்கள் ஃபேஷன் என்கிற பெயரில் காகித பூக்கள், பிளாஸ்டிக் பூக்கள், வாசனையே இல்லாத பூக்களை வைக்கிறார்கள். ஆனால் அந்த காலத்தில் வாசனை தரும் மலர்களை மட்டும் தான் தலையில் சூட வேண்டும் என முன்னோர்கள் சொல்லி வைத்தமைக்கு பின்னால் இவ்வளவு அறிவியல் காரணங்கள் இருக்கின்றன என்பது சற்று வியப்பாகத்ததான் உள்ளது.