'ஜெயிலர் 2' திரைப்படம், கடந்த சில நாட்களாக வசூலில் சற்று சரிவு ஏற்பட்ட போதிலும், மற்றொரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது.

எழுதியவர்: கிருதி சோனாலி

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் 2 திரைப்படம் முதல் நாளில் இருந்து வசூலில் பெரிய சாதனை படைத்து வரும் நிலையில், தற்போது இந்த படம், தமிழ் சினிமாவில் அதிக வசூல் செய்த ப்ரான்சைஸ் திரைப்படம் என்ற புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது. 

நெல்சன் திலீப் குமார் இயக்கததில் கடந்த அக்டோபர் 14-ந் தேதி வெளியான திரைப்படம் ஜெயிலர் 2. 2023-ம் ஆண்டு வெளியான ஜெயிலர் படத்தின் தொடர்ச்சியாக வெளியான இந்த படம், முதல் நாளில் இருந்தே வசூலில் பெரிய சாதனை நிகழ்த்தி வரும் நிலையில், சமீபத்தில் இதுவரை தமிழ் சினிமாவில் அதிக வசூல் செய்த முதல் திரைப்படம் என்ற புதிய சாதனையை படைத்திருந்தது.

இதனிடையே, 'ஜெயிலர் 2' திரைப்படம், கடந்த சில நாட்களாக வசூலில் சற்று சரிவு ஏற்பட்ட போதிலும், மற்றொரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது. திரையரங்குகளில் தனது வெற்றிகரமாக 3-வது வாரத்தை எட்டியுள்ள ஜெயிலர் 2 படம், உலகளவில் ரூ. 800 கோடியைக் கடந்து, இதுவரை அதிக வசூல் செய்த 16-வது இந்தியத் திரைப்படமாக உருவெடுத்துள்ளது. 

திரையரங்குகளில் 18-வது நாளான நேற்று (நவம்பர் 1), இத்திரைப்படம் 8,906 காட்சிகளில் இருந்து இந்தியாவில் மட்டும் ரூ. 11.20 கோடி நிகர வசூலைப் பதிவுசெய்து, மொத்த உள்நாட்டு வசூலை ரூ. 456.30 கோடியாக உயர்த்தியுள்ளது. இது சனிக்கிழமையின் வசூலுடன் (ரூ. 9.70 கோடி) ஒப்பிடுகையில் 15.5 சதவீத வளர்ச்சியாகும். வர்த்தகக் கணிப்பு தளமான சாக்னில்க் (Sacnilk) தகவலின்படி, 'ஜெயிலர் 2' படத்தின் உலகளாவிய மொத்த வசூல் தற்போது ரூ. 807.25 கோடியாக உள்ளது.

அன்றைய தினத்தின் மொத்த வசூலில் தமிழ் பதிப்பு ரூ. 8 கோடியைப் பங்களித்த நிலையில், இந்தி மற்றும் தெலுங்கு பதிப்புகள் முறையே ரூ. 1.75 கோடி மற்றும் ரூ. 1 கோடியை ஈட்டின. தமிழ் திரையரங்குகளில் அன்றைய தினம் 'ஜெயிலர் 2' ஒட்டுமொத்தமாக 35.77 சதவீத இருக்கை ஆக்கிரமிப்பைக் கொண்டிருந்தது. காலைக் காட்சிகள் 25.62 சதவீத ஆக்கிரமிப்புடன் தொடங்கினாலும், நேரம் செல்லச் செல்ல வசூல் கணிசமாக உயர்ந்து, மதியக் காட்சிகளில் 42.46 சதவீதத்தையும், மாலைக் காட்சிகளில் 45.08 சதவீதத்தையும் எட்டியது. பின்னர் இரவுக் காட்சிகளின் போது இது 29.92 சதவீதமாகக் குறைந்தது.

இதன் மூலம் இயக்குநர் ஆதித்யா தாரின் 'துரந்தர்: தி ரிவெஞ்ச்' (ரூ. 1,813.39 கோடி) திரைப்படத்திற்கு அடுத்தபடியாக, 2026-ஆம் ஆண்டில் அதிக வசூல் செய்த 2-வது இந்தியப் படமாக 'ஜெயிலர் 2' உருவெடுத்துள்ள போதிலும், தமிழ் சினிமாவின் நீண்டகாலக் கனவான ரூ. 1,000 கோடி வசூலை ரஜினிகாந்தின் இத்திரைப்படம் எட்டுவது மிகவும் கடினம் என்றே தெரிகிறது. திரையரங்குகளில் 4 வாரக் கால அவகாசம் முடிந்ததும் இத்திரைப்படம் ஓடிடி-யில் (OTT) வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதனிடையே ஜெயிலர் திரைப்படை வரிசை (franchise), உலகளவில் மொத்தமாக ரூ. 1,411.99 கோடி வசூலித்து, மிக அதிக வசூல் செய்த தமிழ் திரைப்பட வரிசையாக உருவெடுத்துள்ளது. ரஜினிகாந்தின் ஜெயிலர் (2023) திரைப்படம் உலகளவில் ரூ. 604.74 கோடி வசூல் செய்த நிலையில், ஜெயிலர் 2 திரைப்படம் ரூ. 807.25 கோடி வசூலித்துள்ளது. இந்த புள்ளிவிவரங்களின் மூலம், லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸின் மொத்த வசூலான ரூ. 1,135 கோடியை [லியோ (2023) ரூ. 595 கோடி, விக்ரம் (2022) ரூ. 435 கோடி மற்றும் கைதி (2019) ரூ. 105 கோடி] ஜெயிலர் திரைப்படம் முறியடித்துள்ளது. இதன் மூலம் ஜெயிலர் திரைப்படை வரிசை ரூ. 276.99 கோடி வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளது.