தீபாவளி என்றாலே பலகாரங்கள், இனிப்புகள் என வீடே களைகட்டும். இந்த ஆண்டு வழக்கமான இனிப்புகளுடன் வித்தியாசமாகவும் சுவையாகவும் ஏதாவது செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் அழகான இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும் ரோஸ் ரசமாலையை வீட்டிலேயே செய்து பாருங்கள்.
தேவையான பொருட்கள்:
-
பால் – 1 லிட்டர்
-
சர்க்கரை – ½ கப்
-
ரோஸ் சிரப் – 3 மேசைக்கரண்டி
-
எலுமிச்சைச் சாறு – 2 மேசைக்கரண்டி
-
ஏலக்காய்த் தூள் – சிறிதளவு
-
பாதாம், பிஸ்தா – தேவையான அளவு
-
ரோஜா இதழ்கள் – சிறிதளவு
செய்முறை:
-
முதலில் பாலை நன்றாகக் கொதிக்க வைத்து, அதில் எலுமிச்சைச் சாறு சேர்த்து பாலைத் திரியச் செய்யவும்.
-
திரிந்த பாலை மெல்லிய துணியில் வடிகட்டி, தண்ணீரில் கழுவி நன்றாகப் பிழியவும்.
-
கிடைத்த பன்னீரை மென்மையாகப் பிசைந்து சிறிய உருண்டைகளாகத் தட்டி வைக்கவும்.
-
சர்க்கரை கலந்த கொதிக்கும் நீரில் இந்த உருண்டைகளைப் போட்டு 10 முதல் 12 நிமிடங்கள் வேகவைக்கவும்.
-
மற்றொரு பாத்திரத்தில் பாலைச் சுண்டக் காய்ச்சி, சர்க்கரை, ரோஸ் சிரப் மற்றும் ஏலக்காய்த் தூள் சேர்க்கவும்.
-
வேகவைத்த பன்னீர் துண்டுகளை மெதுவாகப் பிழிந்து ரோஸ் பால் கலவையில் சேர்க்கவும்.
-
இறுதியாக பாதாம், பிஸ்தா மற்றும் ரோஜா இதழ்களால் அலங்கரித்து குளிர்சாதனப் பெட்டியில் 2 முதல் 3 மணி நேரம் வைக்கவும்.
அவ்வளவுதான்! அழகான நிறத்திலும் ரோஜா மணத்திலும் சுவையான ரோஸ் ரசமாலை தயார்.
இந்த தீபாவளிக்கு உங்கள் வீட்டிலும் இந்த ரோஸ் ரசமாலையைச் செய்து குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாகக் கொண்டாடுங்கள்!
