ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவருடைய பிறப்பு ராசிகும் நவகிரகங்களின் நிலைக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு காணப்படுகின்றது. கிரன நிலைகளில் ஏற்படும் மாற்றமானது 12 ராசிகளின் வாழ்கையிலும் குறிப்பிடத்தக்க சாதக, பாதக விளைவுகளை ஏற்படுத்தும் என நம்பப்படுகின்றது. 

அந்தவகையில், கிரகங்களின் தளபதியாக கருதப்படுபவர் செவ்வாய் தைரியம், வீரம், வலிமை, துணிச்சல் ஆகியவற்றின் கிரகமாக திகழ்கின்றார்.

செவ்வாய் சுக்கிரன் உருவாக்கும் தனசக்தி ராஜயோகம்: டாப் பலன்கள் இந்த 3 ராசிகளுக்கு தான்! | Dhansakthi Rajyog 2026 Who Get Rich Life

செவ்வாய், 45 நாட்களுக்கு ஒருமுறை ராசியை மாற்றுவார் இந்நிலையில், பிப்ரவரி 23  ஆம் திகதி கும்ப ராசியில் நுழைந்தார்.  கும்ப ராசியில் ஏற்கனவே ஆடம்பரத்தின் கிரகமான சுக்கிரன் இருக்கின்றார்.

இதனால் கும்ப ராசிக்குள் சென்ற செவ்வாய் சுக்கிரனுடன் இணைவதால், தனசக்தி ராஜயோகம் உருவாகின்றது. அதன் தாக்கமானது அனைத்து ராசிகளிலும் பிரதிபலித்தாலும் பேரதிஷ்டத்தால் செல்வ செழிப்பை குவிக்கப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம். 

மிதுனம்

செவ்வாய் சுக்கிரன் உருவாக்கும் தனசக்தி ராஜயோகம்: டாப் பலன்கள் இந்த 3 ராசிகளுக்கு தான்! | Dhansakthi Rajyog 2026 Who Get Rich Life

மிதுன ராசிக்காரர்களுக்கு செவ்வாய் சுக்கிரன் உருவாகியுள்ள தனசக்தி ராஜயோகத்தால் வாழ்க்கையில் செல்வ செழிப்பு அதிகரிக்கப்போகின்றது. வருமானத்துக்கான பல வழிகள் திறக்கும்.

நிதி நிலையில் இதுவரை இல்லாத அசுர வள்ச்சி ஏற்படும். இதனால் நீண்ட நாள் கடன் தொல்லைகளுக்கு மொத்தமாக முடிவு கட்டுவீர்கள். 

தொழில் ரீதியில் சுக்கிரன் ஆசியால் செல்வாக்கு அதிகரிக்கும். புதிய வானம், வீடு வாங்கும் யோகம் காணப்படுகின்றது. இந்த காலகட்டத்தில் ஆரம்பிக்கும் எந்த விடயமும் வெற்றியை கொடுக்கும்.

மகரம்

செவ்வாய் சுக்கிரன் உருவாக்கும் தனசக்தி ராஜயோகம்: டாப் பலன்கள் இந்த 3 ராசிகளுக்கு தான்! | Dhansakthi Rajyog 2026 Who Get Rich Life

மகர ராசியில் பிறந்தவர்கள் குறித்த தனசக்தி ராஜயோகத்தால் வியாபாரம் மற்றும் தொழில் ரீதியில் அமோக வளர்ச்சி காணப்பார்கள்.

நீண்ட காலமாக வராமல் இருந்த பணம் கைக்கு வந்து சேரும். பரம்பரை சொத்துக்கள் கைக்ககு வரும் யோகம் காணப்படுகின்றது.பணியிடத்தில் உங்களின் மதிப்பும் மரியாதையும் உயரும்.

பொருளாதார ரீதியில் நீண்ட கால கனவுகள் நிஜமாகும். செவ்வாய், சுக்கிரன் இணைப்பால் பணத்துக்கு பஞ்சமே இருக்காது. ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்பு அமையும்.

கும்பம்

செவ்வாய் சுக்கிரன் உருவாக்கும் தனசக்தி ராஜயோகம்: டாப் பலன்கள் இந்த 3 ராசிகளுக்கு தான்! | Dhansakthi Rajyog 2026 Who Get Rich Life

கும்ப ராசியினருக்கு குறித்த  தனசக்தி ராஜயோகத்தால் வாழ்க்கையில் எதிர்பாராத அளவில் நிதி நிலையில் மாற்றம் உண்டாகும். புதிய தொழல் ஆரம்பிப்பதற்கான வாய்ப்புகள் தானாக அமையும்.

வெளிநாட்டு உறவினர்கள் அல்லது நண்பர்களிடமிருந்து பெரிய தொகை பணவுதவி கிடைக்க வாய்ப்புள்ளது.

கூட்டு தொழில் செய்பவர்களுக்கு நல்ல உச்ச லாபம் கிடைக்கும் வாய்ப்பு காணப்படுகின்றது. பொருளாதார நிலையில் எதிர்பாரத அளவுக்கு வளர்ச்சி உண்டாகும்.