எனக்கு ஆண்களையே பிடிக்காது. இவன் ஒரு கேடுகெட்டவன். இவனைக் கல்யாணம் செய்துகொண்டால் உன் வாழ்க்கையே நாசமாகிவிடும்" என்று ஸ்ரேயாவை எச்சரிக்கிறார்.
கார்த்திகை தீபம் எபிசோட் அப்டேட்: சாமுண்டீஸ்வரிக்கு எதிராக சதித் திட்டம் போடும் சந்திரகலா... தினேஷ் எடுத்த அதிரடி முடிவு!
'கார்த்திகை தீபம்' சீரியலில் இப்போது அடுத்தடுத்து பல அதிர்ச்சியான திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன. அப்படி இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்று பார்க்கலாம்.
சாமுண்டீஸ்வரி அறையில் தனியாக இருக்கும்போது, யோகி உள்ளே வந்து கதவைப் பூட்டிவிட்டு அவரிடம் தவறாக நடக்க முயற்சி செய்கிறான். இதைப் பார்த்து அதிர்ச்சியடையும் சாமுண்டீஸ்வரி போராடுகிறார். அப்போது சத்தம் கேட்டு அங்கு வரும் ஸ்ரேயா, கதவு பூட்டியிருப்பதைப் பார்த்து அதைத் திறக்கிறாள். உடனே யோகி, "சாமுண்டீஸ்வரிதான் என்னிடம் தவறாக நடந்துகொண்டார்" என்று அவர் மீதே பழியைப் போடுகிறான். இதனால் கோபத்தின் உச்சிக்குச் செல்லும் சாமுண்டீஸ்வரி, "எனக்கு ஆண்களையே பிடிக்காது. இவன் ஒரு கேடுகெட்டவன். இவனைக் கல்யாணம் செய்துகொண்டால் உன் வாழ்க்கையே நாசமாகிவிடும்" என்று ஸ்ரேயாவை எச்சரிக்கிறார்.
மேலும், யோகி மீது போலீசில் புகார் கொடுக்கப் போவதாகவும் சொல்கிறார். இதனால் பயந்துபோன யோகி, பக்கத்து அறைக்குச் சென்று தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொள்கிறான். யோகியின் மரணத்துக்குப் பிறகு ஸ்ரேயாவிடம் பேசும் சாமுண்டீஸ்வரி, "நீ ஒரு தவறான நபரிடமிருந்து தப்பித்துவிட்டாய். நல்லதே நடந்திருக்கிறது" என்று ஆறுதல் சொல்கிறார். ஆனால் ஸ்ரேயாவோ, "என் வாழ்க்கையையே நீங்கள்தான் கெடுத்துவிட்டீர்கள்" என்று சாமுண்டீஸ்வரி மீதே கோபப்படுகிறாள். இந்தப் பழைய கதையைச் சொல்லி முடிக்கும் சாமுண்டீஸ்வரி, "யோகி இறந்ததால்தான் அவர்கள் எல்லோரும் என் மீது இவ்வளவு கோபமாக இருக்கிறார்கள்.
இருந்தாலும் நான் அவர்களிடம் போய் மன்னிப்புக் கேட்கப் போகிறேன்" என்று சொல்கிறார். இதைக் கேட்கும் கார்த்திக் நடந்த உண்மையைப் புரிந்துகொள்கிறான். ஆனால் சுவாதியும் ரோகிணியும் அதற்கு மறுப்பு தெரிவிக்கிறார்கள். "அம்மா, நீங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை. மற்றவர்கள் செய்த தவறுக்காக நீங்கள் ஏன் போய் மன்னிப்புக் கேட்க வேண்டும்?" என்று கேட்டு அவரைத் தடுக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல், சுவாதி தனக்கு தினேஷைப் பிடித்திருந்தாலும், அம்மாவின் சுயமரியாதையை விட்டுக்கொடுத்து இந்தத் திருமணம் நடக்க வேண்டாம் என்று உறுதியாகச் சொல்கிறாள். மகளின் பாசத்தையும் அன்பையும் பார்த்து சாமுண்டீஸ்வரி நெகிழ்ந்து போகிறார்.
இதற்கிடையில், சாமுண்டீஸ்வரி வீட்டில் நடந்த விஷயங்களை முத்துவேல் மூலம் தெரிந்துகொள்ளும் சந்திரகலா, இதை வைத்து தனக்குச் சாதகமாக ஒரு திட்டம் போடுகிறாள். நேராக தினேஷ் வீட்டுக்குச் செல்லும் அவள், அங்கே ஸ்ரேயாவைச் சந்தித்துத் தனது திட்டத்தைச் சொல்கிறாள். எதிரிக்கு எதிரி நண்பன். நீ சாமுண்டீஸ்வரிக்கு எதிரியாக இருந்தால் மட்டும் அவளை ஒண்ணும் செய்ய முடியாது. அவளிடம் நல்லவள் மாதிரி நடித்து, அவளுடைய வாழ்க்கையையே கெடுக்கலாம். ஆனால் இந்த விஷயம் உன் தம்பிக்குக்கூடத் தெரியக்கூடாது" என்று சந்திரகலா கூறுகிறாள்.
அவளுடைய திட்டத்தைக் கேட்ட ஸ்ரேயாவும் அதற்கு சம்மதம் தெரிவிக்கிறாள். இதனால் சந்திரகலா - ஸ்ரேயா கூட்டணி உருவாகிறது. மறுபக்கம், சுவாதியின் எதிர்காலத்தை நினைத்து ரேவதி கவலைப்படுகிறார். இதனால் கார்த்திக்கிடம் தனது வருத்தத்தைச் சொல்ல, "நாம் ஏதாவது செய்து இந்தப் பிரச்சினையைச் சரி செய்துவிடலாம்" என்று கார்த்திக் அவருக்கு ஆறுதல் கூறுகிறான். இதற்கிடையில், தினேஷ் தனது அம்மா பத்மாவிடம் சென்று அதிரடியாக ஒரு விஷயத்தைச் சொல்கிறான்.
"எனக்கு சுவாதியுடன் சேர்ந்து வாழ வேண்டும். இல்லையென்றால் இந்த வீட்டை விட்டே வெளியேறிவிடுவேன்" என்று கூறி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்துகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அயலி சீரியல் எபிசோட் அப்டேட்: காளியப்பனின் சதித் திட்டம்! வீட்டை விட்டு வெளியேற்றப்படும் அயலி மற்றும் சிவா!
'அயலி'.தொடரில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது. அடுத்த எபிசோடுகளில் நடக்கப்போகும் அதிரடி திருப்பங்கள். காளியப்பன் மீண்டும் வீட்டுக்குத் திரும்பி வந்து ஒரு பெரிய நாடகமே போடுகிறான். "நான் வெளியே போனால் எனக்கு எந்த மரியாதையும் கிடையாது. நம்ம குடும்பத்தின் பெயரைச் சொன்னால்தான் எனக்கு மதிப்பு கிடைக்கிறது" என்று உருக்கமாகப் பேசி எல்லோரையும் நம்ப வைக்கிறான். அவனுடைய பேச்சைக் கேட்டு வீட்டில் இருப்பவர்களும் அவனைச் சமாதானப்படுத்தி மீண்டும் வீட்டுக்குள் அழைத்துச் செல்கிறார்கள்.
இதையெல்லாம் பார்க்கும் அயலிக்கு ஒரே அதிர்ச்சி. "இவனுக்கு என்ன தைரியம் இருந்தால் திரும்பவும் வீட்டுக்கு வருவான்? இவனை எப்படி எல்லோரும் நம்புகிறார்கள்?" என்று மனதுக்குள் புலம்புகிறாள். இதற்கிடையில், மனவேதனையில் இருக்கும் அயலி சிவாவுக்குப் போன் செய்கிறாள். ஆனால், கோபத்தில் இருக்கும் சிவா அவளுடைய போனை எடுக்கவே மறுக்கிறான். அப்போது சிவாவிடம் பேசும் ஜான், "சார், அயலி மேடம் நீங்க நினைக்கிற மாதிரி கிடையாது.
அவங்க ரொம்ப நல்லவங்க. எதுக்காக சார் அவங்க மேல இவ்வளவு கோபப்படுறீங்க? கொஞ்சம் அவங்களைப் புரிஞ்சுக்கோங்க" என்று எடுத்துச் சொல்கிறான். ஆனால் சிவா எதையும் கேட்காமல் தன்னுடைய கோபத்திலேயே இருக்கிறான். இதனால் அயலி போன் செய்தும் சிவா எடுக்காததால், வீட்டில் தனியாக உட்கார்ந்து வேதனையில் இருக்கிறாள். அந்த நேரத்தில் அயலியின் அறைக்குள் வரும் காளியப்பன், நக்கலாக பேசுகிறான்.
அதற்கு அயலி, "நீங்க கொலை செய்ய முயற்சி செய்ததற்கான வீடியோ ஆதாரம் என்னிடம் இருக்கு. அதை எல்லார்கிட்டயும் காட்டுவேன்" என்று தைரியமாகப் பதிலடி கொடுக்கிறாள். ஆனால் காளியப்பன் கொஞ்சமும் பயப்படாமல், "அப்படியா? அப்போ அதுக்கு முன்னாடி உனக்கு ஒரு விஷயத்தைக் காட்டுறேன். இவங்க யாருன்னு தெரியுதா? இவங்கதான் சிவாவோட அம்மா சங்கரி. இவங்களாலதான் இந்திராணியோட அப்பா இறந்தாருன்னு உனக்குத் தெரியுமா? இந்த உண்மையை நான் மட்டும் சொல்லிட்டா என்ன ஆகும்னு யோசிச்சுப் பாரு" என்று சொல்லி ஒரு ஆதாரத்தைக் காட்டி அயலியை மிரட்டுகிறான்.
காளியப்பன் சொன்னபடியே சங்கரியைப் பற்றிய இந்த அதிர்ச்சியான உண்மையை இந்திராணியிடம் சொல்லிவிடுகிறான். இதைக் கேட்ட இந்திராணி, தன்னுடைய அப்பாவின் மரணத்துக்குச் சிவாவின் அம்மா சங்கரிதான் காரணம் என்பதை அறிந்து கடும் கோபமடைகிறாள். இதனால் ஆத்திரத்தின் உச்சிக்குச் செல்லும் இந்திராணி, அயலியையும் சிவாவையும் வீட்டை விட்டு வெளியே தள்ளுகிறாள். "இனிமேல் நீங்க ரெண்டு பேரும் இந்த வீட்டில் இருக்கக் கூடாது. வெளியே போங்க!" என்று ஆவேசமாகக் கத்தி இருவரையும் விரட்டுகிறாள்.
இந்திராணியின் இந்த அதிரடி முடிவால் அயலியும் சிவாவும் என்ன செய்வதென்று தெரியாமல் அதிர்ச்சியில் உறைந்து நிற்கிறார்கள். காளியப்பனின் சதியால் அயலியும் சிவாவும் வீட்டை விட்டே வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளதால், அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
