இன்றைய வேகமான வாழ்க்கையில் வருமானத்தைச் சம்பாதிப்பதைவிட, அதைச் சரியாகச் சேமித்து செலவிடுவது பலருக்கும் பெரும் சவாலாக மாறியுள்ளது.

குறிப்பாக மாதச் சம்பளம் கிடைத்த சில நாட்களிலேயே பணம் செலவாகிவிடுவதால், குடும்பச் செலவுகளை எப்படிக் கட்டுப்படுத்துவது என்ற கேள்வி பலரிடமும் எழுந்துள்ளது.

இந்த நிலையில், குடும்ப பட்ஜெட் மற்றும் பணத்தைத் திட்டமிட்டு சேமிப்பது தொடர்பான தேடல்கள் TikTok தளத்தில் தற்போது அதிகரித்து வருகின்றன.

நவம்பர் 19ஆம் திகதி வெளியான TikTok தேடல் போக்கு அறிக்கையின்படி, குடும்ப பட்ஜெட் மற்றும் நிதித் திட்டமிடல் தொடர்பான தேடல்கள் முன்னணியில் உள்ளன.

மாத வருமானத்தில் உணவு, மின்சாரம், போக்குவரத்து, வீட்டு வாடகை மற்றும் அத்தியாவசியத் தேவைகளுக்கென தனித்தனியாகப் பணத்தை ஒதுக்குவது போன்ற வழிமுறைகளில் மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

மேலும், தேவையற்ற ஆன்லைன் கொள்வனவுகளைக் குறைப்பது, சிறிய தொகையாக இருந்தாலும் தொடர்ந்து சேமிப்பது போன்ற பழக்கங்களும் சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்று வருகின்றன.

பணத்தைச் சம்பாதிப்பது மட்டுமல்லாமல், அதைச் சரியாக நிர்வகிப்பதும் முக்கியம் என்பதை இந்தப் புதிய போக்கு உணர்த்துகிறது.