ஞாயிற்றுக்கிழமை என்றாலே பலருக்கும் நினைவுக்கு வருவது சுவையான அசைவ உணவுகள்தான். அதிலும் சிக்கன் என்றால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். சிக்கனை வறுவல், சில்லி சிக்கன், சுக்கா எனப் பல வகைகளில் சமைத்து சாப்பிட்டிருப்போம்.

ஆனால், எப்போதும் ஒரே மாதிரியான சிக்கன் உணவுகளைச் செய்து சாப்பிடுவதற்குப் பதிலாக, இந்த வார இறுதியில் கொஞ்சம் வித்தியாசமாக கேரளாவின் பாரம்பரிய சுவையைக் கொண்ட பாலக்காடு ஸ்டைல் சிக்கன் வறுவலை முயற்சி செய்து பாருங்கள்.

தேங்காய் எண்ணெய், கறிவேப்பிலை மற்றும் வறுத்து அரைத்த மசாலாக்களின் மணத்துடன் தயாராகும் இந்த சிக்கன் வறுவல் காரசாரமான சுவையை விரும்புபவர்களுக்கு மிகவும் பிடிக்கும். சாதம், சப்பாத்தி, புரோட்டா எனப் பல உணவுகளுக்கும் இது சிறந்த சைட் டிஷ்ஷாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:

  • சிக்கன் – 1 கிலோ

  • மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி

  • உப்பு – தேவையான அளவு

வறுத்து அரைக்கத் தேவையான பொருட்கள்:

  • சின்ன வெங்காயம் – 15

  • வர மிளகாய் – 5

  • மல்லித்தூள் – 3 தேக்கரண்டி

  • மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி

  • சீரகத்தூள் – 1 தேக்கரண்டி

  • கரம் மசாலாத்தூள் – 1 தேக்கரண்டி

  • மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி

தாளித்து வதக்கத் தேவையான பொருட்கள்:

  • தேங்காய் எண்ணெய் – 4 தேக்கரண்டி

  • பெரிய வெங்காயம் – 2

  • கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி

  • இஞ்சி பூண்டு விழுது – 2 தேக்கரண்டி

  • எலுமிச்சை சாறு – 1 தேக்கரண்டி

  • கொத்தமல்லி இலை – ஒரு கைப்பிடி

  • கறிவேப்பிலை – 1 கொத்து

  • உப்பு – தேவையான அளவு

செய்முறை:

முதலில் சிக்கனை நன்றாகக் கழுவி, அதனுடன் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து கலந்து சிறிது நேரம் ஊறவைக்கவும்.

பின்னர் வறுத்து அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களைத் தேவையான அளவு தேங்காய் எண்ணெயில் வறுத்து ஆறவைத்து, நன்றாக அரைத்துக்கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் ஊற்றி, வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கவும். பின்னர் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து அதன் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

இதனுடன் ஊறவைத்த சிக்கனைச் சேர்த்து நன்றாகக் கிளறவும். பின்னர் அரைத்து வைத்துள்ள மசாலாவைச் சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்து மிதமான தீயில் சிக்கன் நன்றாக வேகும் வரை சமைக்கவும்.

சிக்கன் வெந்ததும் எலுமிச்சை சாறு மற்றும் கொத்தமல்லி இலை சேர்த்து கிளறி இறக்கவும்.

சுவையான பாலக்காடு ஸ்டைல் சிக்கன் வறுவல் தயார்!

இந்த வார இறுதியில் உங்கள் வீட்டிலும் இந்த வித்தியாசமான சிக்கன் வறுவலைச் செய்து குடும்பத்தினருடன் சுவைத்து மகிழுங்கள்.