பாடசாலை மாணவன் ஒருவன் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் வைத்தியர் ஒருவர் மஹரகம பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
விளையாடிக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் அருகிலுள்ள வீட்டு வளாகத்திற்குள் வீழ்ந்த பந்தினை எடுக்க சென்ற மாணவர் மீதே இவ்வாறு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சம்பவத்தில் 17 வயதுடைய மாணவன் ஒருவனின் நெஞ்சுப்பகுதியில் தோட்டா பாய்ந்து காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர் ஒருவரே இவ்வாறு துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மஹரகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கிரிக்கெட் விளையாடியதால் மாணவன் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட வைத்தியர்
- Master Admin
- 23 November 2020
- (542)
தொடர்புடைய செய்திகள்
- 05 September 2024
- (242)
இந்த மாதத்தில் பிறந்தவரா நீங்கள்? உங்கள்...
- 23 November 2020
- (1053)
கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டத்தில் 6 ப...
- 15 March 2021
- (889)
கொழும்பு- கிராண்ட்பாஸ் பகுதியில் தீ விபத...
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
