ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட நோட்டன், கினிகத்தேனை, மஸ்கெலியா பகுதியில் புதிய கொரோனா தொற்றாளர்கள் 12 பேர் இனங்காணப்பட்டதன் காரணமாக ஹட்டன் கல்வி வலயத்தில் உள்ள இரண்டு பாடசாலைககளுக்கு கொரோனா தொற்று பிரதேச மாணவர்களுக்கு வருவதற்கு அனுமதிக்கப்பட மாட்டாது எனவும் ஏனைய மாணவர்களும் ஆசிரியர்களும் வருகை தருவார்கள் என ஹட்டன் வலயக் கல்விப்பணிப்பாளர் பி.ஸ்ரீதரன் தெரிவித்தார்.
கடந்த 30 திகதி இப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். முடிவுகள் வெளியானதனை தொடர்ந்து கினிகத்தேனை பகுதியில் 06 பேருக்கும், நோட்டன் பகுதியில் 05 பேருக்கும், மஸ்கெலியா பகுதியில் 01 ஒருவருக்கு தொற்று பரவியுள்ளமை கண்டுப்பிடிக்கப்பட்டதை தொடர்ந்து குறித்த இரண்டு பிரதேச மாணவர்கள் வருவது தடுக்கப்பட்டுள்ளது.
கினிகத்தேனை தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதனையடுத்து நுவரெலியா மாவட்ட வைத்திய பணிப்பாளரின் அறிவுறுத்தலுக்கமைய கினிகத்தேனை பிளக்வோட்டர் பகுதியில் 45 குடும்பங்களைச் சேர்ந்த 120 பேரும், நோட்டன் தண்டுகலா பிரதேசத்தில் 16 குடும்பங்களைச் சேர்ந்த 71 பேரும் அரசாங்த்தினால் வழங்கப்படும் 10,000 ரூபா பெறுமதியான உலர் உணவு பொதிகள் வழங்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
பாடசாலை மாணவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்
- Master Admin
- 04 December 2020
- (1412)

தொடர்புடைய செய்திகள்
- 04 May 2020
- (509)
கொரோனா அச்சத்தால் பிரித்தானியாவிலிருந்து...
- 01 January 2021
- (383)
நாட்டில் மேலும் 320 பேருக்கு கொரோனா தொற்...
- 03 December 2020
- (374)
புரெவி புயல் - யாழ். மாவட்டத்தின் தற்போத...
யாழ் ஓசை செய்திகள்
தங்கம் வாங்க காத்திருப்போருக்கு முக்கிய தகவல்!
- 09 July 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.