போடி சர்ச் தெருவை சேர்ந்தவர் ஆரோக்கியம் (வயது 27). கொத்தனார். நேற்று முன்தினம் இவர், வேலைக்கு சென்றபோது அந்த பகுதியில் ஒரு வீடு திறந்து கிடந்தது. இதையடுத்து அந்த வீட்டுக்குள் புகுந்த அவர், திடீரென அங்கு இருந்த 27 வயது இளம்பெண்ணை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து மானபங்கம் செய்ய முயன்றார்.
இதைத்தொடர்ந்து அந்த பெண் கூச்சல் போட்டார். இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டு வந்து ஆரோக்கியத்தை மடக்கிப்பிடித்தனர். பின்னர் அவர், போடி தாலுகா போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.