ரோம்: இத்தாலி நாட்டில் மனைவியுடன் சண்டை போட்ட நபர் ஒருவர், அந்த கோபத்தை தணிப்பதற்காக 450 கி.மீ நடந்தே சென்றுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தாலியில் கொரோனா பாதிப்பு காரணமாக இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. அந்த நேரத்தில் வெளியே வருபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தனது மனைவியிடம் சண்டை போட்ட 48 வயது நபர் தனது கோபத்தை கட்டுப்படுத்துவதற்காக வீட்டை விட்டு வெளியேறி நடக்க ஆரம்பித்துள்ளார்.
இதனையடுத்து, அவரது கோபம் அவ்வளவு சீக்கிரம் குறையவில்லை. ஏனென்றால் அவர் சுமார் 450 கி.மீ தூரம் நடந்து சென்றுள்ளார். அந்த அளவுக்கு அவருக்கு கோபம் அதிகம் இருந்திருக்கும் போல. தினமும் 64 கி.மீ தூரம் வரை நடந்து சென்றுள்ளார். இறுதியில் அவர் போலீசாரிடம் சிக்கியுள்ளார். அவரது நடைபயணத்தை கேட்டறிந்த காவல்துறையினர் அதிர்ச்சியடைந்தனர். இருப்பினும் ஊரடங்கு உத்தரவை மீறிய காரணத்திற்காக அவருக்கு ரூ.36,000 அபராதமும் விதித்தனர். இதனிடையே, அவரது மனைவி தனது கணவரை காணவில்லை என காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அரங்கேறிய பரிதாபம்: மனைவியுடன் சண்டை போட்ட கணவர், கோபத்தில் 450 கி.மீ நடந்தே சென்றுள்ளதாக தகவல்.!
- Master Admin
- 07 December 2020
- (590)

தொடர்புடைய செய்திகள்
- 22 January 2021
- (589)
மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து - 15 ப...
- 29 January 2021
- (556)
பாகிஸ்தானில் பரபரப்பு - வானத்தில் தோன்ற...
- 28 December 2020
- (302)
எகிப்திய மம்மிகளின் புது வாழ்வு
யாழ் ஓசை செய்திகள்
லைப்ஸ்டைல் செய்திகள்
1/2 கப் பாசிப்பருப்பில் அட்டகாசமான சுவையில் அல்வா...
- 26 July 2025
இத தவறாம செய்ங்க.. தலைமுடி முழங்கால் வரை வளரும்
- 23 July 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.