பாத்டேப்பில் இதுவரை தண்ணீர் மற்றும் சோப்பு நுரையை வைத்து தான் குளிப்பதை பார்த்து இருக்கிறோம். ஆனால் பிரபல நடிகை ஒருவர் பாத்டேப்பில் பால் மட்டும் ரோஜா பூ வைத்து அதில் குளியல் போட்டு உள்ள புகைப்படம் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாலிவுட்டில் சன்னி லியோன், பூனம் பாண்டேவுக்கு இணையாக ரசிகர்களை கவர்ச்சியில் கலக்கிக் கொண்டிருக்கும் நடிகைகளில் ஒருவர் ஊர்வசி ரவுத்தேலா. இவர் அவ்வப்போது தனது டாப்லஸ் உள்ளிட்ட கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து லைக்ஸ்களை அள்ளி விடுவார். இவர் எந்த புகைப்படத்தை பதிவு செய்தாலும் அதற்கு மில்லியனுக்கும் அதிகமாக லைக்ஸ்கள் குவியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது அவர் பாத்டேப்பில் பால் மற்றும் ரோஜாப் பூ இதழ்கள் போட்டு குளிக்கும் புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்தில் கிளியோபட்ராவின் பால் குளியல் என்று அவர் குறிப்பிட்டுள்ளதோடு, இந்த புகைப்படத்திற்கு பொருத்தமான கேப்ஷனைத் எழுதுங்கள் என்று ரசிகர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட ரசிகர்கள் தங்களுடைய கற்பனைக் குதிரையைத் தட்டிவிட்டு விதவிதமான கேப்ஷன்களை பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.