லண்டனில் குழந்தைகளுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய அடுத்த சில நிமிடங்களில் பால்கனியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவில் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் அந்தளவிற்கு இல்லை, தங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் வீட்டிற்குள்ளே கிறிஸ்துமஸ் தினத்தை கொண்டாடும் படி அறிவுறுத்தப்பட்டது.
இந்நிலையில், தலைநகரான லண்டனின் Shepherd’s Bush நகரில் வசிக்கும் 51 வயது மதிக்கத்தக்க Sharon Anne Daly-O’Dwyer(51) என்ற பெண், தன் வீட்டில் குழந்தைகளுடன் கிறிஸ்துமஸை கொண்டாடியுள்ளார்.
கிறிஸ்துமஸ் பரிசுகளை திறந்து பார்த்த அவர், சிகரெட் குடிப்பதற்காக வெளியில் வந்ததாக கூறப்படுகிறது. அப்போது வீட்டின் உள்ளே இருந்த மகள் Taylor மற்றும் மகன் Drew-வுக்கு தாய் வெளியே சென்ற சில நிமிடங்களில், ஒரு சத்தம் கேட்டுள்ளது.
அவர்கள் தங்கள் தாய் தான் படியில் இருந்து கீழே விழுந்துவிட்டதாக நினைத்து வந்த போது, தாய் Sharon Anne Daly-O’Dwyer குடியிருப்பின் பால்கனியில் இருந்து கீழே விழுந்து கிடப்பதைக் கண்டு கடும் அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து இது குறித்து உடனடியாக ஆம்புலன்சிற்கு தெரிவிக்கப்பட்டதால், விரைந்து வந்த துணை மருத்துவர்கள் அவரை காப்பாற்ற போராடியுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து மகள் Taylor கூறுகையில், நான் உதவி செய்ய ஓடினேன். ஆனால் அதற்குள் இறந்துவிட்டாள்.
அவள், மூச்சு விடவில்லை, கண்கள் திறந்திருந்தன.
சிபிஆர் முயற்சி செய்த மருத்துவர்கள் இனிமேல் இது தேவையில்லை என்று கைவிரித்துவிட்டனர். தாயின் கண்ணை மூடிய போது, நான் கையை பிடித்து முத்தம் கொடுத்தேன், ஐ லவ் யூ என்று சொன்னேன், எங்களுடைய சிறந்த அம்மா என்று வேதனையுடன் கூறினார்.
மேலும் இறப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னர், கிறிஸ்துமஸ் தினத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் பகிரப்பட்டுள்ளது. ஒரு பணிப் பெண்ணாக வேலை செய்து வந்த அவர், இந்த வேலை இந்த கொரோனா காரணமாக வேலையை இழந்தார்.
Taylor நண்பர்களான ஜார்ஜி, ஷெரோன் புஷ்ஷில் ஷரோன் ஆகியோர் Sharon Anne Daly-O’Dwyer-வை தங்களின் இரண்டாவது அம்மா என்று கூறினர்.