கொல்லங்கோடு அருகே சூரியகோடு ஆக்கவிளை பகுதியை சேர்ந்த அலெக்சாண்டர் மகள் அனிஷா (வயது 27). இவரது 2 மாத கைக்குழந்தைக்கு நேற்றுமுன்தினம் நூல்கட்டும் நிகழ்ச்சி நடந்தது. இதனையடுத்து இரவு குழந்தைக்கு அன்பளிப்பாக கிடைத்த நகைகளுடன் தாயும், குழந்தையும் வீட்டில் ஜன்னல் ஓரம் தூங்கினர்.
அப்போது ஜன்னல் கதவை திறந்து வைத்திருந்ததாக தெரிகிறது. நேற்று காலை அனிஷா எழும்பி பார்த்த போது குழந்தைக்கு அணிந்திருந்த தங்க சங்கிலி, காப்பு, பிரேசிலெட், மோதிரம் என 6 ¾ பவுன் நகைகளை காணவில்லை. அவற்றை யாரோ மர்ம நபர்கள் ஜன்னல் வழியாக திருடி சென்றதாக கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின் பேரில் கொல்லங்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்து குழந்தையின் நகைகளை திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
