சுகாதார வழிக்காட்டல்களுக்கு அமைய பாடசாலை கல்வி நடவடிக்கைகள் அனைத்தும் நாளை (11) முதல் முன்னெடுக்கப்படும் என கல்வியமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

அத தெரண பிக் போகஸ் நகழ்ச்சியல் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகள் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் நாளை பாடசாலை திறக்கப்படவுள்ளன, இதற்கமைய தரம் 2 முதல் 13 வரை நாளைய தினம் பாடசாலைகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.´ என்றார்.

கேள்வி: கொவிட் தொற்று ஏற்பட்டால் பொறுப்பை ஏற்பதாக கடந்தமுறை மாணவர்களுக்கு கூறப்பட்டடது கூறினீர்கள். ஆனால் இப்போது தொற்று ஏற்படவும் வாய்ப்புண்டு என கூறுகின்றீர்கள். ஏன் இந்த இரட்டை நிலைப்பாடு?

பதில் : பொறுப்பின்றி செயற்பட்டால் எனக்கு பதிலளிக்க முடியாது.