வவுனியா- கூமாங்குளம் பகுதியிலுள்ள வீடொன்றில் தற்கொலை செய்துகொண்ட இளம் குடும்ப பெண்ணின் சடலம், பொலிஸாரினால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
நேற்று (திங்கட்கிழமை) மாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 26 வயதான பெண்ணே உயிரிழந்துள்ளார்.
மேலும் சம்பவ தினத்தன்று வீட்டில் எவரும் இருக்கவில்லை எனவும் இதன்போதே அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
அத்துடன் கணவன் மனைவிக்கு இடையில் தகராறு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.