பொதுவாகவே மனிதர்களாக பிறப்பெடுத்த ஒவ்வொருவருக்குமே, வாழ்க்கை முழுவதும் ஆடம்பரமாகவும், செல்வசெழிப்புடனும் வாழ வேண்டும் என்றும், தங்களின் வாழ்க்கை தங்களுக்கு பிடித்தாற்போல் அமைய வேண்டும் என்றும் ஆசை இருப்பது இயல்பானது.

ஆனால் அந்த ஆசையே நம் வாழ்வை அழிக்கும் அளவுக்கு பேராசை கொண்டவர்களாக இருப்பது தான் ஆபத்தானது.

தங்களின் அழிவுக்கு தாங்களே காரணமாகும் 3 ராசிகள்... உங்க ராசியும் இதுல இருந்தா ஜாக்கிரதை | Which 3 Zodiac Signs Are Their Own Enemies

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில், குறிப்பிட்ட சில ராசியில் பிறந்தவர்கள் தங்களின் அழிவுக்கு தாங்களே காரணமாக இருப்பார்களாம்.அப்படிப்பட்ட ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

ரிஷபம்

தங்களின் அழிவுக்கு தாங்களே காரணமாகும் 3 ராசிகள்... உங்க ராசியும் இதுல இருந்தா ஜாக்கிரதை | Which 3 Zodiac Signs Are Their Own Enemies

ரிஷப ராசியில் பிறந்தவர்கள் உலகத்து இன்பங்களுக்கு அதிபதியாக திகழும் சுக்கிரனால் ஆளப்படுவதால், இவர்கள் இயல்பாகவே சொகுசு வாழ்கையின் மீது தீராத மோகம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

இதனால் பணத்தை ஆடம்பர பொருட்களை வாங்குவதற்கும் தேவையற்ற மகிழ்ச்சியை நாடுவதற்கும் அதிகம் செலவு செய்வார்கள். 

ஆனால் தங்களின் இந்த தேவையற்ற ஆடம்பரத்துக்கு  பெரிய விலை கொடுக்க வேண்டியிருக்கிறது என்பதை அவர்கள் ஒருபோதும் சிந்தித்து செயல்படுவது கிடையாது. இதனால் பல சமயங்களில் பிரச்சினைகளில் சிக்கிக்கொள்வார்கள்.

தங்களின் ஆடம்பரத் தேவைகளுக்காக அவர்கள் கடினமாக உழைப்துடன், எது சரி அல்லது தவறு என்ற சிந்தனையின்றி பணத்துக்காக எதையும் செய்யலாம் என்ற எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இதுவே இவர்கள் வாழ்வில் சந்திக்கும் பல பிரச்சினைகளுக்கு முக்கிய காரணமாக இருக்கும். 

கடகம்

தங்களின் அழிவுக்கு தாங்களே காரணமாகும் 3 ராசிகள்... உங்க ராசியும் இதுல இருந்தா ஜாக்கிரதை | Which 3 Zodiac Signs Are Their Own Enemies

கடக  ராசியினரும் சுக்கிரனால் ஆளப்படுவதால், இவர்களுக்கும் ஆடம்பர மோகம் சற்று அதிகமாக இருக்கும். இவர்கள் மிகவும் மென்மையான குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

ஆனால் மற்றவர்கள் தங்களை மதிக்கும் அளவுக்கு சிறப்பான வாழ்க்கை வாழ வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்கள். இவர்களின் இந்த எண்ணம் சில சமயம் சட்டத்துக்கு புறம்பான செயவ்களில் ஈடுபடவும் வழிவகுக்கும்.

அவர்கள் எப்போதும் தங்களின் தோற்றம் மற்றும் ஆடை குறித்து அதிக அக்கறை கொண்டவர்களாக இருப்பார்கள்.

இவர்களுக்கு சொகுசு வாழ்க்கை மீது காணப்படும் அதிக மோகம் இவர்களின் வாழ்க்கையும் நல்ல குணங்களையும் அழித்துவிடும் சக்தியாக மாறகூடும்.

கன்னி

தங்களின் அழிவுக்கு தாங்களே காரணமாகும் 3 ராசிகள்... உங்க ராசியும் இதுல இருந்தா ஜாக்கிரதை | Which 3 Zodiac Signs Are Their Own Enemies

கன்னி ராசியில் பிறந்தவர்கள் இயல்பாகவே எந்த விடயத்திலும், அதிக நேர்த்தியையும், முழுமையையும் எதிர்ப்பார்க்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். 

இவர்களின் இந்த குறிப்பிட்ட குணத்தால் தங்களுக்குத் தாங்களே மிகப்பெரிய எதிரிகளாக மாறுகிறார்கள். இவர்கள் மற்றவர்களுடன் முறன்படும் விடயம் என்றால், அது பரிபூரணத்துவம் சார்ந்ததாக தான் இருக்கும்.

எந்த விஷயமாக இருந்தாலும்அது சரியாக இருக்க வேண்டும் என்ற இந்த அதீதப் பற்று ஒரு கட்டத்துக்கு மேல் இவர்களை கடுமையாக மன அழுத்தத்துக்கு ஆளாக்கும். இவர்களின் இயல்பான குணமே இவர்களுக்கு மிகப்பெரும் பிரச்சினையாக மாறிவிடும்.