‘சீன ஆக்கிரமிப்பு காரணமாக  பிரதமர் நரேந்திர மோடி இந்திய  நிலப்பரப்பை சீனாவிடம் ஒப்படைத்துள்ளதாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்திய – சீன எல்லையில் இரு தரப்புக்கும் இடையே நடந்த மோதலில்  இந்திய வீரர்கள்  20 பேர்  வீர மரணம் அடைந்தனர். இது குறித்து  எதிர்க்கட்சியினர் அதிருப்தி தெரிவித்து இருந்தனர்.

இந்நிலையில் இது  குறித்து ருவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள அவர் மேற்படி குற்றஞ்சாட்டியுள்ளார்.  தொடர்ந்து தெரிவித்துள்ள அவர்,  “சீன ஆக்கிரமிப்பு காரணமாக  பிரதமர் மோடி  இந்திய நிலப்பரப்பை அந்த நாட்டிடம் ஒப்படைத்து விட்டார்.

அந்த நிலப்பகுதி  சீனாவுக்கு சொந்தமானது என்றால்  நம் வீரர்கள் ஏன் கொல்லப்பட வேண்டும்? எங்கு அவர்கள் கொல்லப்பட்டனர் என்பதற்கு பிரதமர் விளக்கமளிக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.