மான்செஸ்டரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 36 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த 21 வயதான மற்றொருவர் வைத்தியசாலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக கிரேட்டர் மான்செஸ்டர் பொலிஸார் டுவீட் செய்துள்ளனர்.
துப்பாக்கிச் சூடு நடந்ததாக கருதப்படும் மோஸ் சைட் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.