மேல் மாகாணத்தில் கொவிட் தொற்றுக்குள்ளானவர்களில் எண்ணிக்கை 42 ஆயிரத்தை கடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று (01) காலை 06.00 மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 864 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 64,156 அதிகரித்துள்ளதாக கொவிட்-19 பரவல் தடுப்பு செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டவர்களில் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்த 362 பேரும், கம்பஹா மாவட்டத்தை சேர்ந்த 88 பேரும், களுத்துறை மாவட்டத்தைச் சேர்ந்த 66 பேரும் அடங்குவதாக கொவிட்-19 பரவல் தடுப்பு செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, மேல் மாகாணத்தில் இதுவரை 42,693 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொத்தணியில் வைரஸ் தோற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 60,174 ஆக அதிகரித்துள்ளது

கடந்த 24 மணித்தியாலங்களில் சுமார் 882 பேர் குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பியுள்ளனர்.

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 57,158 ஆக உயர்வடைந்துள்ளது. மேலும், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 6,682 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 3 பேர் உயிரிழந்ததை அடுத்து வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 316 ஆக உயர்வடைந்துள்ளது.