கேகாலை தேவாலேகம வீடொன்றினுள் கூரையை பிரிந்து இறங்கிய நபரொருவர் 78 வயதுடைய வயோதிப பெண் ஒருவரை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய கொலை செய்துள்ளார்.
கொலையினை புரிந்த சந்தேகநபர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் அண்மையில் சிறையில் இருந்து விடுதலையான 28 வயதுடைய இளைஞன் என தெரியவந்துள்ளது.
போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் சிறைச்சாலையில் இருந்து விடுதலையாகி வீட்டில் சுய தனிமைப்படுத்தலில் இருந்த நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று முன்தினம் (09) நள்ளிரவு உயிரிழந்த பெண் தனிமையில் இருந்துள்ள நிலையில், வீட்டின் கூரையை பிரித்துக் கொண்டு நுழைந்துள்ளார்.
பின்னர் குறித்த பெண்ணின் தங்க நகைகள் மற்றும் பணத்தை திருடியுள்ளதாகவும் பின்னர் குறித்த பெண்ணை நிர்வாணப்படுத்தி துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ள நிலையில் பின்னர் குறித்த பெண் உயிரிழந்திருக்க அல்லது கொலை செய்திருக்க கூடும் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
கேகாலை பிரதான நீதவான் ஷாலிகா நவரத்ன சம்பவ இடத்திற்கு சென்று நீதவான் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில், கேகாலை பொலிஸின் குற்றவியல் விசாரணை பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
78 வயது பெண்ணை துஸ்பிரயோகம் செய்து கொலை செய்த 28 வயது இளைஞன்!
- Master Admin
- 11 February 2021
- (1360)

தொடர்புடைய செய்திகள்
- 01 December 2020
- (524)
கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் தகனத்திற்...
- 19 January 2021
- (544)
வவுனியாவில் குடும்ப பெண் தற்கொலை- பொலிஸா...
- 26 March 2021
- (414)
வேன், முச்சக்கரவண்டி நேருக்கு நேர் மோதி...
யாழ் ஓசை செய்திகள்
கல்வி அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
- 09 July 2025
தமிழர் பகுதியில் பேருந்து சாரதிகளின் மோசமான செயல்!
- 09 July 2025
யாழில் அதிகாலையில் பயங்கரம் ; மூவருக்கு நேர்ந்த கதி
- 09 July 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.