திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் அருகே உள்ள வெள்ளியூர் கிராமத்தை சேர்ந்தவர் பானுபிரியா (வயது 25). இவருக்கும் திருவள்ளூர் காந்திபுரம் பகுதியை சேர்ந்த சசிகுமார் (வயது 27) என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு குழந்தை இல்லை.
இதனால் பானுபிரியா மன வருத்தத்தில் இருந்து வந்தார். இந்த நிலையில் அவர் தனது தாய்வீடான வெள்ளியூர் கிராமத்திற்கு சென்றார்.
நேற்று காலை வீட்டில் தனியாக இருந்த பானுபிரியா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த வெங்கல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
பானுபிரியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வெங்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீபபி தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.
குழந்தை இல்லாத ஏக்கத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
