கொரோனா தொற்று காலமாக பலரும் வீட்டிலிருந்தபடி வேலை செய்து வருகின்றனர்.
தனியார் மற்றும் அரசு அலுவலகங்கள் தொடர்பான சந்திப்புகள் அனைத்தும் ஆன்லைன் வீடியோ கால் மூலமாக நடைபெற்றது.
இப்படி ஆன்லைன் மூலம் நடைபெறும் சந்திப்புகளில் சில தவறுகளோ, நகைச்சுவைகளோ அறியாமல் நடக்கத் தவறியதுமில்லை.
அப்படி ஏதேனும் நிகழ்வு நடைபெறும் போது அது உலகளவில் வைரலாகி, கவனிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், தற்போதும் அது போன்ற ஒரு வீடியோ இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், நபர் ஒருவர் ஜூம் வீடியோ கால் மூலம் தனது தொழில் தொடர்பாக ஏதோ பேசிக் கொண்டிருந்த நிலையில், திடீரென அவர் அருகே வரும் அவரது மனைவி, அவரை முத்தமிட முயற்சி செய்கிறார்.
ஆனால், இதை சற்றும் எதிர்பாராத அந்த நபர், அதிர்ச்சியடைந்த நிலையில், கோபத்துடன் மனைவியிடம், 'முட்டாள்தனமாக நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்? மீட்டிங்கில் பேசிக்கொண்டிருக்கிறேன் என கோபத்துடன் கூறுகிறார். .
இருந்த போதும் அந்த மனைவி, எதுவும் பேசாமல் சிரித்துக் கொண்டே நிற்கிறார். இது தொடர்பான வீடியோவை, பிரபல தொழிலதிபர் ஹர்ஷ் கோயங்கா, தனது ட்விட்டர் பக்கத்தில், வேடிக்கையான ஜூம் கால்' என குறிப்பிட்டுள்ளார்.
Zoom call .....so funny 😄 😄😄pic.twitter.com/6SV62xukMN
— Harsh Goenka (@hvgoenka) February 19, 2021