சகோதரர்கள் இருவர் துவிச்சக்கர வண்டியில் பயணித்த போது எதிரே வந்த வாகனம் மோதியதில் சிறுவன் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மற்றைய சிறுவன் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சித்திரைப் புத்தாண்டு தினமான நேற்று காலை 8.45 மணியளவில் நாவலர் வீதி கனகரத்தினம் மகா வித்தியாலயத்துக்கு அருகில் இந்தத் துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஜெயரூபன் மதுசிகன் (வயது-8) என்ற சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அவரது மூத்த சகோதரனான 12 வயதுச் சிறுவன் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சகோதரர்கள் இருவரும் துவிச்சகர வண்டியில் பயணித்த போது எதிரே வந்த வடி வாகனம் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளனர்.
மூத்த சகோதரன் துவிச்சக்கர வண்டியைச் செலுத்திச் சென்றுள்ளார். பின்னிருக்கையிலிருந்த இளைய சகோதரரன் வீதியின் பக்கம் வீழ்ந்ததால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் நளினி சுதாகரன் முன்னிலையில் முற்படுத்தப்பட்டார்.
சாரதியை வரும் 20ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க மேலதிக நீதிவான் உத்தரவிட்டார்.
விபத்தில் சிறுவன் பலி
- Master Admin
- 15 April 2021
- (590)

தொடர்புடைய செய்திகள்
- 18 February 2021
- (460)
பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக் கொள்ளப்பட...
- 06 November 2020
- (388)
உயிர் தியாகத்தை விட சுகாதார அமைச்சர் பதவ...
- 25 May 2025
- (124)
திருமணமான பெண்கள் நெற்றியில் குங்குமம் வ...
யாழ் ஓசை செய்திகள்
தங்கம் வாங்க காத்திருப்போருக்கு முக்கிய தகவல்!
- 09 July 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.