‘பியார் பிரேமா காதல்’, ‘இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும்’, ‘தாராள பிரபு’ போன்ற படங்களின் மூலம் கவனம் ஈர்த்தவர் ஹரிஷ் கல்யாண். தமிழ் திரையுலகின் சாக்லேட் பாய் லிஸ்டில் இடம்பெற்றுள்ள இவர், அரசு பள்ளி மாணவிகள் மருத்துவ கல்லூரியில் படிக்க பண உதவி செய்துள்ளார்.

மாணவிகளுக்கு ஹரிஷ் கல்யாண் பண உதவி வழங்கிய போது எடுத்த புகைப்படம்

டாக்டருக்கு படிக்க நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழக அரசு கொண்டு வந்த சிறப்பு சட்டத்தின் மூலம் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் டாக்டருக்கு படிக்க வாய்ப்புகள் வழங்கப்பட்டு உள்ளது. அதன் அடிப்படையில் தேர்வான மூன்று மாணவிகளுக்கு நடிகர் ஹரிஷ் கல்யாண் பண உதவி செய்துள்ளார்.

ஏழை மாணவிகள் மருத்துவக் கல்வி பயில உதவிய நடிகர் ஹரிஷ் கல்யாணுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.