சனி பகவான் நாம் செய்யும் புண்ணியத்திற்கு ஏற்ற வகையில் நமக்கு பாவ புண்ணியங்களை சமமாக தருவார். இதனால் அவரை ஜோதிடத்தில் நீதி கடவுள் என அழைக்கின்றனர். 

வரும் ஜூலை 27 ஆம் தேதி மீன ராசியில் வக்ர பெயர்ச்சி அடையப் போகிறார். இந்த பெயர்ச்சி டிசம்பர் 11, 2026 வரை சனி இதே நிலையில் தான் பயணிப்பார். இந்த பெயர்ச்சியில் மொத்தமாக 138 நாட்கள் வரை இருப்பார். 

சனியின் வக்ர பெயர்ச்சி சில ராசிகளுக்கு  நல்லதையும் சில ராசிகளுக்கு கெட்டதையும் தருவார். இந்த 138 நாளில் மூன்று ராசிகள் நல்ல பலன்களை அனுபவிப்பார்.  தங்கம், செல்வம், செழிப்பு, பணமழை போன்றவற்றை உங்கள் ராசிக்கு நிறைவாக தருவார். 

அதுமட்டுமின்றி இந்த ராசிக்காரர்கள் தொழில், வணிகம் மற்றும் ஆரோக்கியத்தில் சில சாதகமான பலன்களைப் பெறுவார்கள் அந்த ராசிகள் பற்றி பார்க்கலாம். 

138 நாட்கள் தொடரும் சனி வக்ர பெயர்ச்சி - எந்த ராசிக்கு நல்ல பலன்? | Shani Vakram 138 Days 3 Zodiac Signs More Benifits

மேஷம்

 

மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த சனி வக்ர பெயர்ச்சி வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும்.

வேலையிலும் வியாபாரத்திலும் இருந்து வந்த தடைகள் விலகும்.

வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு அவமரியாதை ஏற்பட்டு இருந்தால், அதிலிருந்து மீளலாம்.

நீங்கள் நல்லவர் என்பதை பலரும் இந்த கால கட்டத்தில் அறிவார்கள். 

கடகம் 

கடக ராசியில் 9ம் வீட்டில் சனி பகவான் வக்ர பெயர்ச்சி அடைவார். 

இதனால் முதலாளிகள் உங்கள் தொழிலில் வளர்ச்சியை காணலாம்.

ஏதாவது ஒரு புதிய தொழில் தொடங்க வேண்டும் என்றால் இந்த காலகட்டம் மிகவும் சிறப்பை தரும். 

நீங்கள் இப்போது இருக்கும் வேலை பிடிக்கவில்லை என்றால் அதிலிருந்து மாறி கொள்ளலாம். 

மகரம்

 

மகர ராசிகர்களுக்கு சனி மூன்றாம் வீட்டில் பெயர்ச்சி அடைவார். 

வேலை செய்யும் இந்த ராசியை சேர்ந்தவர்களுக்கு இது நல்ல கால கட்டமாக அமையும். 

உங்களுக்கு புதிய வேலை வாய்ப்பு கிடைக்கலாம். 

நிதி நிலையில் முன்னோக்கி செல்வீர்கள். 

புதிய வீடு அல்லது வாகனம் ஏதாவது ஒரு சொத்து வாங்குவீர்கள்.