நெருங்கிய தோழிக்கு பாசிட்டிவ் – தனக்கும் இருக்குமா ? அப்செட்டில் சமந்தா
சில நாட்களுக்கு முன்பு, ஷில்பா ரெட்டிக்கு முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை சமந்தா வெளியிட்டிருந்தார். ஷில்பா ரெட்டிக்கு கொரோனா அறிகுறி இருப்பதாக தகவல் பரவி வருகிறது. இதனால் சமந்தாவிற்கும் தொற்று பரவி இருக்குமோ என்று ரசிகர்கள் கேள்விகளை எழுப்பியுள்ளனர்.
சமந்தா திருமணத்திற்கு பிறகு ஹைதாராபாத்திலேயே செட்டில் ஆகிவிட்டார். ஊரடங்கு தொடங்கிய பிறகு படப்பிடிப்புகள் ஏதும் இல்லாததால், கணவர், குடும்பம், நாய்குட்டி என பொழுதை கழித்து வருகிறார். மேலும் வீட்டிலேயே வீட்டு விவசாயம் செய்து வருகிறார். இது தொடர்பான புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்திருக்கிறார்.
சில நாட்களுக்கு முன், சமந்தவின் நெருங்கிய தோழியும் பேஷன் டிசைனருமான ஷில்பா ரெட்டியின் கன்னத்தில் சமந்தா முத்தம் கொடுக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஷில்பா கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் பாசிட்டிவ் என ரிசல்ட் வந்துள்ளதாக அவரே தெரிவித்திருக்கிறார்.
இதனால் சமந்தா யோசனையில் உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்புதான், ஷில்பாவுக்கு முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை சமந்தா வெளியிட்டிருந்தார். சமீபத்தில் இருவரும் சந்தித்துக்கொண்டதால் சமந்தாவிற்கம் கொரோனா தொற்று பரவி இருக்குமோ என்று ரசிகர்கள் கேள்விகளை எழுப்பியுள்ளனர்.