வடக்கு மாகாண சுகாதார தொண்டர்கள் யாழ்ப்பாணம் - கண்டி பிரதான வீதியை மறித்து இன்று மதியம் தமது போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.
வடக்கு மாகாண சுகாதார தொண்டர்கள் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்னால் தொடர்ந்து மூன்றாவது நாளாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
தமக்கு வழங்கப்பட்ட நியமனத்தை மீள பெற்று தருமாறு கோரிக்கை விடுத்து கவனயீர்ப்பு போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.
கடந்த 2019ஆம் ஆண்டு அப்போதைய ஆளுநர் எடுத்த முயற்சியின் பயனாக வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த தொண்டர்களாக கடமையாற்றிய சுகாதார பணியாளர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் முகமாக சுகாதார பணியாளர்களுக்கு நியமன கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
எனினும் குறித்த நியமனத்தில் முறைகேடு இடம்பெற்றதாக பாதிக்கப்பட்ட சுகாதார பணியாளர்கள் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டதன் காரணமாக குறித்த நியமனங்கள் அனைத்தும் இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில், நிரந்தர நியமன கடிதம் பெற்ற சுகாதார பணியாளர்கள் 454 பேர் தமக்கு உரிய தீர்வினை வழங்குமாறும் நீண்ட காலமாக தொண்டு அடிப்படையில் வைத்தியசாலைகளில் கடமையாற்றிய தாகவும் எனவே தமக்கு நிரந்தர நியமனத்தை வழங்குமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணம் - கண்டி பிரதான வீதியை மறித்து போராட்டம்
- Master Admin
- 03 March 2021
- (581)

தொடர்புடைய செய்திகள்
- 29 March 2021
- (414)
நல்லூர் கிட்டுப் பூங்காவிற்கு தீ வைப்பு
- 19 May 2021
- (695)
சௌதியில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்க...
- 10 April 2025
- (255)
ஆபத்துக்களில் இருந்து மீண்டெழுப்போகும் ம...
யாழ் ஓசை செய்திகள்
அமெரிக்க டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்
- 01 July 2025
வரதட்சணை கொடுமை... புதுமணப்பெண்கள் விபரீத முடிவு
- 01 July 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.