தல அஜித்தின் வலிமை படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

Valimai Vs Thalapathy 65 Release Update : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை. இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்தது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையிலும் ஹைதராபாத்திலும் நடந்தது.

இதனையடுத்து பரவி வரும் கொரோனா வைரஸால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் படப்பிடிப்புகள் அப்படியே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்த வருட தீபாவளிக்கு வலிமை திரைப்படம் வெளியாகும் என கூறப்பட்டு வந்த நிலையில் இன்னும் படப்பிடிப்புகள் முடியாததால் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போகிறது.

மேலும் அஜித் கொரோனா வைரஸ் தாக்கம் முழுமையாக முடிவடைந்த பின்னர் தான் படத்தின் படப்பிடிப்புகளை தொடங்க வேண்டும் என திட்டவட்டமாக கூறி விட்டதால் அடுத்த வருடம் ஜனவரியில் தான் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் இந்தப் படத்தை 2021 ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

இதே தினத்தில் தான் தளபதி விஜய் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க உள்ள தளபதி 65 படத்தை ரிலீஸ் செய்ய சன் பிக்சர்ஸ் நிறுவனம் திட்டமிட்டு வருகிறது.

இதனால் ஆறு வருடங்களுக்கு பிறகு தல தளபதியின் படங்கள் நேருக்கு நேர் மோதிக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு முன்னதாக 2014 ஆம் ஆண்டில் விஜய்யின் ஜில்லா மற்றும் அஜித்தின் வீரம் ஆகிய திரைப்படங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன என்பது குறிப்பிடத்தக்கது.