இதில் குறித்த பெண் உயிரிழந்த பின்பே தலை துண்டிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.

மேலும் அவர் உயிரிழக்கும் போது கர்ப்பமாக இல்லை என்றும் குறிப்பிடப்படுகின்றது.

இதேவேளை இரவு உணவைத் தொடர்ந்து இரண்டு முதல் மூன்று மணி நேரத்திற்குள் அந்தப் பெண் இறந்துவிட்டார் என்று பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண குறிப்பிட்டார்.

இதேவேளை குறித்த பெண்ணை அடையாளம் காண்பதற்காக நடத்தப்பட்ட டி.என்.ஏ பரிசோதனை அறிக்கையும் இன்று வெளியானது.

இதில் உயிரிழந்த பெண் குருவிட்ட பகுதியில் வசிக்கும் 30 வயதுடைய பெண் என தெரியவந்துள்ளது.

பெண்ணின் அடையாளம் உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து இன்று பிரேதபரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதேவேளை குறித்த பெண்ணின் தலை இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.