இந்த விஷயத்தை தனது இன்ஸ்டாகிராமில் ஃபோட்டோவுடன் பதிவிட்டிருக்கிறார்.
பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை வீட்டில் ஒரு மகிழ்ச்சியான விஷயம் நடந்துள்ளது.
விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவின் ஹவுஸ் ஓனராகவும், சந்தேக கணவனிடம் மாட்டிக் கொண்டு தவிக்கும் மனைவியாகவும் நடித்து வருபவர் நடிகை நீபா. காவலன் உள்ளிட்ட படங்களில் நடித்த இவர், பயிற்சி பெற்ற பரத நாட்டிய நடனக் கலைஞர்.
அடிக்கடி தனது நடன வீடியோக்களால் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களை ஆச்சரியப்படுத்துகிறார். பிரபல நடன இயக்குனர்களான வாமன் மற்றும் மாலினி வாமன் ஆகியோரின் மகள் தான் நீபா. எனவே, மிக இளம் வயதிலிருந்தே நடனத்தில் ஆர்வம் கொண்டிருந்தார். கலைஞர் டிவி-யில் ஒளிபரப்பான ‘மானாட மயிலாட’ என்ற நடன நிகழ்ச்சியில் டைட்டிலை வென்றார். தவிர, ரோஜா கூட்டம், என் பொம்மு குட்டி அம்மாவுக்கு போன்ற சீரியல்கள் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த நீபா, தற்போது பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து வருகிறார்.
தற்போது புதிய ஸ்வான்கி காரை வாங்கியிருக்கிறார் நீபா. இந்த விஷயத்தை தனது இன்ஸ்டாகிராமில் ஃபோட்டோவுடன் பதிவிட்டிருக்கிறார். தனது கணவர் மற்றும் குடும்பத்தினருடன் இந்த மகிழ்ச்சியான தருணத்தை கேக் வெட்டி கொண்டாடியிருக்கிறார் நீபா. இதையடுத்து ரசிகர்கள் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.