ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவருடைய ராசி மற்றும் நட்சத்திரமதனது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, விசேட ஆளுமை, நிதி நிலை, தோற்றம் மற்றும் அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களில் பெருமளவில் ஆதிக்கம் செலுத்தும் என நம்பப்படுகின்றது.
இந்தவகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்த பெண்கள் பிறப்பிலே தெய்வ சக்தி கொண்டவர்களாகவும், எதிர்காலம் குறித்து சரியான கணிக்கும் திறன் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.
அப்படி இயல்பானவே தெய்வீக தன்மையுடன் இருக்கும் பெண் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
ரிஷபம்
உலகத்து இன்பங்களுக்கு அதிபதியாக திகழும் சுக்கிரனின் ஆதிக்கத்தில் பிறந்த ரிஷப ராசியினர் இயல்பாகவே மற்றவர்களை ஈர்க்கும் தெய்வீக அழகு கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்களின் நேர்மை, பணிவான நடத்தை மற்றும் மன உறுதி, ஆகியனஅவர்களை தெய்வீக பெண்மையின் உருவகமாக மாற்றுகின்றது. இவர்களுக்கு இயல்பாகவே லட்சுமி தேவியின் ழுமுமையான அருள் இருக்கும்.
இவர்கள் இயற்கையின் அனைத்து படைப்புகளிலும் அழகைக் காண்கிறார்கள், தூய்மைக்கு அதீத முக்கியத்துவம் கொடுக்கும் இவர்கள் உன்னதமான ஆன்மாவை கொண்டுள்ளனர்.
கடகம்
சந்திரனின் ஆதிக்கத்தில் பிறந்த கடக ராசி பெண்கள் அதிக அக்கறை உணர்வு கொண்டவர்களாகவும் அனைத்து உயிர்கள் மீதும் அன்பு செலுத்தும் குணம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.
இவர்களிடம் எதிர்காலத்தில் நடக்கபோவதை முன்கூட்டியே துள்ளியமாக கணிக்கும் தெய்வீக ஆற்றல் இருக்கும். இவர்கள் இருக்கும் இடம் மகிழ்ச்சியாலும் அமைதியாலும் நிரம்பியிருக்கும்.
இவர்களை பார்க்கும் பொது மற்றவர்களின் மனநிலையில் ஒரு தெய்வீக உணர்வு ஏற்படும் அளவுக்கு முகத்தில் வசீகரம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
சிம்மம்
சிம்ம ராசி பெண்கள் மிகச்சிறந்த குணங்களை கொண்டவர்களாகவும் தெய்வீக தன்மை பொருந்தியவர்களாகவும் அறியப்படுகின்றார்கள்.
இவர்கள் பிறப்பிலேயே துர்கா தேவியின் அம்சத்தைக் கொண்டவர்களாக இருப்பார்கள். தோற்றத்ததால் யாரையும் ஈர்க்கும் தன்மை இவரை்களுக்கு நிச்சயம் இருக்கும்.
வீரம், அன்பு மற்றும் இரக்கம் என்பவற்றுக்கு பெயர் பெற்ற இவர்கள் யார் வாழ்வில் இருந்தாலும் மனநிறைவை கொடுப்பார்கள்.