வட மாகாணத்தில் மேலும் 12 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

இன்று வடமாகாணத்தில் 370 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் அவர்களில் 12 பேருக்கு தொற்றுறுதியாகியுள்ளது.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த 9 பேருக்கும் வவுனியாவை சேர்ந்த 3 பேருக்குமே இவ்வாறு தொற்றுறுதியாகியுள்ளது.