பசறையில் 14 பேரின் உயிரிழப்புக்கு காரணமாக இருந்த பஸ் விபத்திற்கான காரணம் தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது.

பஸ் விபத்து நடந்த இடத்தில் வீதியின் தரம் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்க மூன்று பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் குறித்த விபத்துக்கான காரணம் வீதியின் நிலைமை அல்ல என்று குறித்த குழு தீர்மானித்துள்ளன.

இந்த விபத்து கடந்த மாதம் 20 ஆம் திகதி நடந்தது, சம்பந்தப்பட்ட மூன்று உறுப்பினர்கள் கொண்ட குழு மறுநாளே ஆய்வுப் பயணத்தை நடத்தியது.

குறித்த விபத்து இடம்பெறுவதற்கு வீதி அபிவிருத்தி அதிகார சபை, லொரி சாரதி மற்றும் பஸ் சாரதி ஆகியோரே முழுமையான பொறுப்பேற்க வேண்டும் என வீதி பாதுகாப்பு தொடர்பான பயற்சியாளரான டபிள்யூ. ஏ.வீரதுங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இதற்கு வீதி அபிவிருத்தி அதிகார சபை பொறுப்பல்ல என்று நெடுஞ்சாலை அமைச்சகம் கூறுகிறது.