திருகோணமலை கந்தளாய் பகுதியில் விகாரைக்குச் சென்ற இரு சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் பௌத்த பிக்கு ஒருவர் இம்மாதம் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கந்தளாய் நீதிமன்ற பதில் நீதிவான் மேனக்கா தமயந்தியால் இன்று (07) இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
தம்பலகாமம் 96 ஆம் கட்டை பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய விகாராதிபதி ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கந்தளாய் 96 ஆம் கட்டை சந்தியில் அமைந்துள்ள அக்ரபோதி விகாரைக்குச் சென்ற 12 மற்றும் 14 வயதுச் சிறுவர்கள் பூஜை வழிபாட்டுக்காகச் சென்ற போது பௌத்த பிக்கு தங்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக பாதிக்கப்பட்ட சிறுவர்கள் தமது பெற்றோர்களுடன் தம்பலகாமம் பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கமைய நேற்றிரவு (6) பிக்குவை கைது செய்ததாக தம்பலாகாமம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபரான பௌத்த பிக்குவை இன்றைய தினம்(7) தம்பலாகாமம் பொலிஸார் கந்தளாய் நீதிமன்ற பதில் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
விகாரைக்கு சென்ற சிறுவர்கள் துஸ்பிரயோகம் - பௌத்த பிக்கு கைது!
- Master Admin
- 07 April 2021
- (1546)

தொடர்புடைய செய்திகள்
- 30 September 2024
- (356)
அக்டோபர் மாதம் முதல் அமோக வாழ்க்கை வாழப்...
- 27 April 2025
- (288)
சேர்ந்து வரும் 2 ராஜயோகங்கள்: பணக்கட்டை...
- 27 June 2024
- (703)
சனியால் இன்னும் 5 நாட்களில் கிடைக்கும் ப...
யாழ் ஓசை செய்திகள்
லைப்ஸ்டைல் செய்திகள்
1/2 கப் பாசிப்பருப்பில் அட்டகாசமான சுவையில் அல்வா...
- 26 July 2025
இத தவறாம செய்ங்க.. தலைமுடி முழங்கால் வரை வளரும்
- 23 July 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.