சொந்த ஊருக்கு அழைத்து செல்ல வற்புறுத்தியதால் மனைவி மற்றும் மகனை வெட்டி கொலை செய்த வடமாநில தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
கேரளாவில் திருவனந்தபுரம், பத்தனம்திட்டா உள்ளிட்ட மாவட்டங்களில் வெளிமாநில தொழிலாளர்கள் வசித்து வருகிறார்கள். இவர்கள் அப்பகுதியில் கூலி வேலை பார்த்து வாழ்க்கை நடத்துகிறார்கள்.
இந்த நிலையில் சத்தீஸ்கர் மாநிலம் கிளாஸ்பூர் பகுதியை சேர்ந்த குஷால்சிங் மராந்தி (வயது 31) என்பவர் மனைவி கீதாபாய் (30), மகன் அருண்சிங் (6) ஆகியோருடன் திருவனந்தபுரம் அருகே போத்தங்கோடு பகுதியில் தங்கி கூலி வேலை செய்து வருகிறார்.
கீதாபாய் அடிக்கடி கணவர் குஷால்சிங்மராந்தி யிடம் சொந்த ஊருக்கு சென்று விடலாம் என்று கூறி வந்தார். இதில் அவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்றும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த குஷால்சிங்மராந்தி வெட்டு கத்தியால் மனைவி மற்றும் மகனை வெட்டினார். இதில் காயம் அடைந்து ரத்தம் கொட்டிய நிலையில் இருந்த அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருவனந்த புரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித் தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து போத்தங் கோடு போலீசார் வழக்கு பதிவு செய்து குஷால்சிங் மராந்தியை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.