வவுனியா, பூங்கா வீதியில் அமைந்துள்ள அரச அதிகாரி ஒருவரின் அரச விடுதியில் புகுந்து திருடிய குற்றச்சாட்டில் மூவர் வவுனியா பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
வவுனியா தெற்கு சிங்கள பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் அரச அதிகாரி ஒருவரின் வீட்டிற்குள் கடந்த வாரம் புகுந்த திருடர்கள் 75 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் இரண்டரைப் பவுண் நகை என்பவற்றை திருடிச் சென்றிருந்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிசில் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து, விசாரணைகளை முன்னெடுத்த வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் மூவரை கைது செய்துள்ளனர். கைது செய்த மூவரிடமும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிசார், அவர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அரச அதிகாரி ஒருவரின் வீடு புகுந்து திருடிய குற்றச்சாட்டில் மூவர் கைது
- Master Admin
- 01 May 2021
- (427)

தொடர்புடைய செய்திகள்
- 19 January 2024
- (1180)
இந்த செடிகள் வீட்டில் இருக்கா... உடனே அப...
- 14 May 2025
- (176)
அனுமனின் அருள் பெற்ற ராசிக்காரர்கள் யார்...
- 16 November 2024
- (169)
இந்த ராசியில் பிறந்தவர்கள் ஆபத்தானவர்களா...
யாழ் ஓசை செய்திகள்
லைப்ஸ்டைல் செய்திகள்
1/2 கப் பாசிப்பருப்பில் அட்டகாசமான சுவையில் அல்வா...
- 26 July 2025
இத தவறாம செய்ங்க.. தலைமுடி முழங்கால் வரை வளரும்
- 23 July 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.