பாகிஸ்தானில் லாகூரிலிருந்து, வடமேற்கு கைபர் பக்துன்க்வா மாகாணத்துக்கு பயணிகள் பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து, ஹசன் அப்தல் என்ற இடத்தில் வந்த போது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் பயணிகள் 13 பேர் பலியாகினர். மேலும் 25- பேர் காயம் அடைந்தனர்.
இந்த விபத்து குறித்து தகவலறிந்ததும் மீட்புப் படையினர் விரைந்து சென்று காயம் அடைந்தவர்களை உடனடியாக மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். காயம் அடைந்தவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.