திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட 87 ஆம் கட்டை சந்திப் பகுதியில் இரண்டு பவுசர்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் இருவர் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்துச் சம்பவம் இன்று (07) பிற்பகல் 2.00 மணி அளவில் இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
திருகோணமலையில் இருந்து கொழும்புக்கு எரிபொருளை ஏற்றிச் சென்ற பவுசர் வாகனம் ஒன்றும், குருணாகலையில் இருந்து திருகோணமலைக்குச் சென்ற பவுசர் வாகனமுமே இவ்வாறு விபத்துக்கு உள்ளாகி உள்ளன.
இதன்போது, 35 வயதுடைய சாரதி ஒருவரும் மற்றும் 46 வயதுடைய உதவியாளர் ஒருவரும் படுகாயம் அடைந்துள்ளனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
எரிபொருள் பவுசர்கள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து
