கல்முனை சாய்ந்தமருது பிரதேசத்தில் போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட வியாபாரி ஒருவரை இன்று (09) மாலை கைது செய்ததுடன் அவரிடமிருந்து 100 மில்லி கிராம் ஹெரோயின் மற்றும் 590 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கல்முனை விசேட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து இன்று மாலை சாய்ந்தமருது பகுதியில் வீதியில் வைத்து போதைபொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த குறித்த நபரை சுற்றிவளைத்து மடக்கிப் பிடித்து கைது செய்தபோது இவரின் உடமையில் இருந்து 100 மில்லி கிராம் ஹெரோயின் மற்றும் 590 போதை மாத்திரைகளை மீட்டனர்.
இதில் கைது செய்யப்பட்டவர் சாய்ந்தமருது பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞர் எனவும் நீண்டகாலமாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஹெரோயின் மற்றும் போதை மாத்திரையுடன் ஒருவர் கைது
- Master Admin
- 09 May 2021
- (488)

தொடர்புடைய செய்திகள்
- 22 March 2021
- (528)
மஸ்கெலியா கோவிலில் கொவிட் கொத்தணி!
- 09 June 2025
- (96)
இனியும் தாமதம் வேண்டாம்.. வீட்டிலிருந்து...
- 20 March 2021
- (516)
இலங்கையில் மேலும் 158 பேருக்கு கொரோனா
யாழ் ஓசை செய்திகள்
அமெரிக்க டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்
- 25 July 2025
நாளுக்கு நாள் சரிவடையும் தங்க விலை
- 25 July 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.