தமிழ் சினிமாவில் குடும்ப பாங்கான கதாபாத்திர நடிகைகள் ஒருசிலரே இருக்கிறார்கள். ஆரம்பத்தில் எப்படி நடித்தாரோ தற்போது வரை அதை கடைப்பிடித்து வரும் நடிகைகளின் லிஸ்டில் இருப்பவர் நடிகை ஸ்ரீ திவ்யா.
2000ல் தெலுங்கு சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பின் தமிழில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார். இதையடுத்து நடித்து வந்த ஸ்ரீ திவ்யாவிற்கு நல்ல படங்கள் அமையாமல் வாய்ப்பில்லாமல் இருந்து வந்தார். கடைசியாக 2017ல் சங்கிலி புங்கிலி கதவ தொர என்ற படத்தில் தான் நடித்திருந்தார்.
இதற்கிடையில் வாய்ப்பு பெற போட்டோஹுட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். க்ளாமர் அள்ளித்தீர்த்து புகைப்படங்களை வெளியிடும் நடிகைகள் மத்தியில் அவர் மேக்கப் இல்லாமல் க்ளாமர் ஆடையை அணியாமல் புகைப்படத்தினை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து விடுகிறார்.
தற்போது ஒரே ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை மயக்கி இணையத்தை அதிரவைத்துள்ளார் ஸ்ரீ திவ்யா.