அக்கடதேசத்து நடிகைகள் தமிழில் அறிமுகமாவது இயல்பாகிவிட்டது. அதேபோல், தமிழில் காதல் அழிவதில்லை படத்தில் நடிகர் சிம்புவிற்கு ஜோடியாக நடித்து அறிமுகமானவர் நடிகை சார்மி கவுர். ஆரம்பத்தில் இருந்தே க்ளாமர் நடிப்பால் ரசிகர்களை ஈர்த்து வந்தார்.

இதையடுத்து தெலுங்கு, இந்தி, கன்னடம் படங்களில் நடிக்க ஆரம்பித்து சென்றுவிட்டார். இடையில் படங்களில் நடிப்பதை குறைத்துவிட்டு வந்த சார்மி தற்போது தயாரிப்பில் இறங்கியுள்ளார். நடிகர் விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே இணைந்து நடிக்கும் லிகர் படத்தை தயாரித்து வருகிறார்.

இந்நிலையில் 33 வயதாகி இருக்கும் சார்மி கவுர், தனக்கு திருமணம் நடப்பதாக ஊடகங்களில் வெளியான செய்தி பற்றி ஓப்பனாக பேசியுள்ளார். தான் தற்போது வேலையில் சிறந்த ஒரு காலகட்டத்தில் இருக்கிறேன். ஏற்கனவே ஒருவரை ஆழமாக காதலித்து தோல்வியை கண்டிருந்தேன். மீண்டும் அதேபோல் நடக்க விரும்பவில்லை.

ஒருவரை மனதில் வைத்துக் கொண்டு மற்றொருவருடன் சேர்ந்து வாழ்வது என்னால் முடியாது. திருமணம் செய்ய மாட்டேன். சிங்கிளாக இருப்பதே ஜாலியாகத்தான் இருக்கிறது என்றும் கூறியுள்ளார். திருமணம் குறித்து வதந்திகளை பரப்புபவர்களுக்கு குட் பை வேறு ஒன்று சுவாரஸ்யமானதை எழுதுங்கள் என்று கூறியுள்ளார் சார்மி.